215. தசையாகிய


ராகம் : கீரவாணிதாளம்: ஆதி
தசையா கியகற் றையினால் முடியத்
தலைகா லளவொப்பனையாயே
தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற்
றவிரா வுடலத்தினைநாயேன்
பசுபா சமும்விட் டறிவா லறியப்
படுபூ ரணநிட் களமான
பதியா வனையுற் றநுபூ தியிலப்
படியே யடைவித்தருள்வாயே
அசலே சுரர்புத் திரனே குணதிக்
கருணோ தயமுத்தமிழோனே
அகிலா கமவித் தகனே துகளற்
றவர்வாழ் வயலித் திருநாடா
கசிவா ரிதயத் தமிர்தே மதுபக்
கமலா லயன்மைத்துனவேளே
கருணா கரசற் குருவே குடகிற்
கருவூ ரழகப்பெருமாளே
.

Learn The Song




Raga Keeravani (21st mela)

Arohanam: S R2 G2 M1 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M1 G2 R2 S

Paraphrase

தசையாகிய கற்றையினால் முடிய தலைகால் அளவு ஒப்பனையாயே (thasaiyAgiya katRaiyinAl mudiya thalai kAl aLavu oppanaiyAyE) : My body is a mere bundle of flesh and muscle, fully adorned from head to toe.

தடுமாறுதல் சற்று ஒருநாள் உலகில் தவிரா உடலத்தினை நாயேன் (thadumARuthal satRu oru nAL ulagil tavirA udalaththinai nAyEn) : I possess a body which cannot avoid wavering/staggering through in this world every day.

பசு பாசமும் விட்டு (pasupAsamum vittu) : After giving up the ego and possessiveness,

அறிவால் அறிய படு பூரண நிட்களமான பதிபாவனை உற்று (aRivAl aRiyappadu pUraNa nitkaLamAna pathi bAvanai utRu ) : my intellect must contemplate the Complete Entity, which is shapeless and formless; பதி பாவனை (pathi bAvanai) : contemplating on Pathi, the Supreme;

பாச ஞானம் - கருவிகளைக் கொண்டு அறியும் அறிவு. பசு ஞானம் - உயிர் தன்னை அறியும் அறிவு. பதி ஞானம் - இறைவனது திருவருளே கண்ணாக அறியும் அறிவு. இறைவனைப் பாச ஞான பசு ஞானங்களால் அறிய முடியாது பதி ஞானத்தினாலே அறிய வேண்டும்;

அநுபூதியில் அப்படியே அடைவித்து அருள்வாயே (anuboothiyil appadiyE adaiviththu aruLvAyE ) : By Your Grace, bless me so that I meditate on the Supreme One, and experince the transcendental state.

அசலேசுரர் புத்திரனே (asalEsurar puththiranE) : You are the son of AsalEsurar (Lord of Mount KailAsh)! அசல (achala) : that which cannot be moved, mountain;

சைவ சமயத்தின் பெரிய கோயில் என்றழைக்கப்படுவது திருவாரூர். ஆறு சிவத்தலை விராட புருடனின் ஆறு ஆதாரங்கள் என்று போற்றுவது சைவமரபு. அம்முறையில் திருவாரூர் மூலாதாரத்தலம். பஞ்ச பூத தலங்களுள் பூமித் தலமானதும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரக் கூடிய பெருமையைக் கொண்டதும், சிவபெருமான் அருள்பாலிக்கும் தலமாகவும் விளங்குகிறது திருவாரூர் தியாகராஜர் கோயில்.

இந்த கோயிலின் இரண்டாம் பிராகாரத்தில் மேற்கு நோக்கி உள்ளது அசலேசுவரர் சந்நிதி. அப்பரால் பாடப்பட்டது. சமற்காரன் என்ற அரசனின் கடும் தவத்துக்கு மகிழ்ந்து, அவன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனியில் சலியாது எழுந்தருளியதால் அசலேசர் ஆனார்.

குணதிக்கு அருணோதய (kuNathikk aruNOthaya) : You imbibe the hue of the rising sun in the East! குண/குணக்கு(guNa) : east; குண திக்கு(guNa thikku) : eastern direction;

முத்தமிழோனே அகில ஆகம வித்தகனே (muththamizOnE akila Agama viththaganE) : You excel in all three branches of Tamil, namely literature, music and drama! You are the expert in all the vedic scriptures!

துகளற்றவர் வாழ் வயலித் திருநாடா (thukaLatRavar vAzh vayali thirunAdA ) : You reside at VayalUr where blemishless devotees of Yours live!

கசிவார் இதயத்து அமிர்தே (kasivA rithayath thamirthE) : You are the Divine nectar flowing in the tender-hearted people!

மதுபக் கமலாலயன் மைத்துனவேளே (mathubak kamala Alayan maiththuna vELE) : You are the brother-in-law of BrahmA seated on the Lotus sought after by bees! மதுப(ம்) (mathubam) : bees; Lord Brahma is Parvati's (cousin) brother, being Vishnu's son,and hence he is Murugan's brother-in-law ('maithunan').

கருணாகர சற்குருவே (karuNA karasaR kuruvE) : You are filled with kindness, Oh Great Master!

குடகிற் கருவூர் அழகப் பெருமாளே.(kudakiR karuvUr azhakap perumALE.) : Your Western abode is KaruvUr, Oh, Beautiful and Great One! குட(க்)கு (kudagu ) : west; குடக்கு/குணக்கு used in udukka thugil.

பதி, பசு, பாசம்

சைவ சித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் என்ற முப்பொருள்கள் அடிப்படைக் கோட்பாடுகளாகவும், என்றும் உள்ள பொருள்களாகவும் கருதப் படுகின்றன. இந்த முப்பொருள்களில் எந்த ஒன்றும் ஒருகாலத்தும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றவில்லை. எனவே இம்மூன்றையும் அநாதி நித்தப் பொருள் என்பர். அவை என்றும் உள்ளவை; அழிவதுதில்லை. இந்த மூன்று பொருள்களில்தான் ஏனைய பொருள்கள் தோன்றி ஒடுங்குகின்றன.

என்றும் நிலைத்திருக்கும் இம் மூன்றும் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டவை. இவற்றில் பதி என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது உயிரைப் பிணிக்கும் கட்டு அல்லது தளையையும் குறிப்பிடுகின்றன.

பதி/கடவுள் பேரறிவு உடையது என்றும், உயிர் சிற்றறிவுடையது என்றும் தளை உயிர் அற்றதாகவும் அறியப்படுகிறது. இறைவன் உயிர்களோடு உடலில் உள்ள உயிர் போல ஒன்றாய் கலந்து நின்றாலும் இறைவன் உயிர் ஆகமாட்டான். உயிர்கள் இயல்பாகவே அறிவுள்ளவை. ஆனால் மலங்களினால் பிணைக்கப்படும் போது அவற்றின் அறிவு மறைக்கப்படுகின்றது. மலங்களின் பிணைப்பிலிருந்து தாங்களாகவே விடுபடுவதற்கு உயிர்களால் முடியாது. இறைவன் துணையுடனேயே மலங்களின் பிணைப்பிலிருந்து உயிர்கள் விடுபட முடியும். இதனால் இவை பசு எனப்படும். பசுவாகிய உயிர் பாசத்தோடு கூடி அறிவு மறைந்தும் தோன்றியும் மாறுதல் அடைந்தாலும் முத்திநிலையில் பதியைச் சேர்ந்த பின் ஒரு நிலையாய் நிற்கிறது.

மலங்கள் சடப்பொருள்கள் அறிவற்றவை. உயிர்களைப் பிணித்து அவற்றின் அறிவை மறைக்கும் வல்லமை கொண்டவை. இதனை சைவ சித்தாந்தம் பாசம் என்கிறது. பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும்.

சுருக்கமாக கூறின்
இறைவன் - தாமே அறியும் பேரறிவு உடையவன்.
உயிர்கள் - அறிவிக்க அறியும் சிற்றறிவு உடையவன்.
மலங்கள் - அறிவித்தாலும் அறியாத சடப்பொருள்கள்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே