214. எந்தன் சடலங்கம்


ராகம் : சஹானாதாளம்: திச்ர ஏகம்
எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
யென்றுந்துயர் பொன்றும்படியொருநாளே
இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
யென்றும்படி பந்தங்கெடமயிலேறி
வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
மண்டும்படி நின்றுஞ்சுடரொளிபோலும்
வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
வண்டன்தமி யன்றன்பவம்ஒழியாதோ
தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறுமணியாரம்
சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
சம்புந்தொழ நின்றுந்தினம்விளையாடும்
கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே
கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
கந்தன்குடி யின்தங்கியபெருமாளே.

Learn The Song




Raga Sahana (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 P M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 M1 R2 G3 R2 S


Paraphrase

எந்தன் சடல அங்கம் பல பங்கம் படு தொந்தங்களை (endhan sadala angam pala bangam padu thondhangaLai) : My body organs have been subjected to so many hardships and impairments;

என்றும் துயர் பொன்றும்படி ஒரு நாளே (endrum thuyar pondrum padi oru nALE) : Will there be a day when all this sorrow will end?

இன்பம் தரு செம்பொன் கழலுந்தும் கழல் தந்தும் (inbam tharu sempon kazhal undhum kazhal thandhum ) : Please grant me Your lotus feet adorned with the golden anklet that grants eternal bliss; கழல் (kazhal) : feet; செம்பொன் கழல் (sempon kazhal) : reddish-hued golden anklets;

பினை என்றும்படி பந்தம் கெட மயிலேறி வந்தும் (pinai endrum padi bandham keda mayilERi vandhum) : thereafter, You must come to me mounted on Your Peacock to destroy my attachments permanently.

பிரசண்டம் பகிரண்டம் புவி எங்கும் திசை மண்டும் படி நின்றும் சுடரொளி போலும் (pirachaNdam bagiraNdam buvi engum dhisai maNdum padi nindrum sudaroLi pOlum) : You must come with valour and illuminate all the galaxies in every direction in this cosmos, standing there like a radiant light,so that பிரசண்டம் (pirachandam) : strength, power, violence; பகிரண்டம் (bagirandam) :the space surrounding celestial spheres, firmament, அண்டத்தின் வெளி;

வஞ்சம் குடி கொண்டும் திரி நெஞ்சன் (vanjam kudi koNdum thiri nenjan) : I, roaming about with a constantly scheming heart,

துகள் என்றும் கொளும் வண்டன் (thugaL endrunkoLum vaNdan) : a wicked fellow always committing crimes.

தமியன் தன் பவம் ஒழியாதோ (thamiyan than bavam ozhiyAdhO) : and a loner – would not the cycle of birth cease for me? (when you come resplendent on a peacock)?

தந்தந்தன திந்திந்திமி யென்றும் பல சஞ்சங்கொடு (thandhanthana dhindhindhimi endrum pala sanchankodu) : Making a sound like "thandhanthana dhindhindhimi" and "sanjan sanjan",

தஞ்சம் புரி கொஞ்சும் சிறு மணியாரம் (thanjam puri konjum siRu maNiyAram) : the beads in Your dainty gem chain clink as though saying to Your devotees "I shall give you refuge."

சந்தம் தொனி கண்டும் (chandham dhoni kaNdum) : Listening to that rhythmic sound,

புயல் அங்கன் சிவன் நம்பன் பதி சம்பும் தொழ (puyalangan sivanamban pathi sambum thozha) : Vishnu, dark like the rainy cloud, SivA and BrahmA together worship You.புயல்(puyal) : cloud; பதி சம்பு (pathi sambu) : chief (of creation)- Brahma;

நின்றும் தினம் விளையாடும் (nindrum dhinam viLaiyAdum) : You play in the hearts of Your devotees everyday!

கந்தன் குகன் என்றன் குரு என்றும் தொழும் அன்பன் கவி கண்டு (kandhan guhan endran guru endrum thozhum anban kavi kandu) : Seeing the poetry of Your devotee Nakkeran who prayed to You as "KandhA, GuhA, My Master!",

உய்ந்திட அன்று அன்பொடு வருவோனே ( kavi kaNduyndhida andranbodu varuvOnE) : You were moved with love and came before him,

கண்டின் கனி சிந்தும் சுவை பொங்கும் புனல் தங்கும் சுனை (kaNdin kani sindhum suvai pongum punal thangunj sunai) : The fountains are filled with water flavored by the fruits dropping into them that are as sweet as sugar candy, கற்கண்டின் இனிப்புச் சுவையுள்ள பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும்

கந்தன் குடியின் தங்கிய பெருமாளே.(kandhankudi yinthangiya perumALE.) : at Kandhankudi, which is Your abode, Oh Great One! தேன்காடு எனும் மதுவனத்தில் தவமிருந்து தெய்வானை கந்தனை தரிசித்த தலமே கந்தன்குடி. அம்பரன், அம்பன் எனும் அரக்கர்கள் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இயற்றி வரங்களை பெற்று பெரும் கொடும் செயல்களை செய்தனர். இதனால் கோபங்கொண்ட தேவி அரக்கர்களை வதம் செய்ய தேன்காடு வந்து சேர்ந்தாள். உடன் வந்த முருகனை தெய்வயானை இருக்கும் திசை அனுப்பி விட்டு தானே அரக்கர்களை சம்ஹாரம் செய்தாள். தவத்தில் மூழ்கியிருந்த தெய்வயானைக்கும் முருகனுக்கும் பரஸ்பரம் காதல் உணர்வு பிறந்து வளர்ந்தது. இதை காட்டும் வகையில் தெய்வானை தெற்கு நோக்கி கைகளில் கிளியோடு தவம் முடித்த களையுடன் தனிச்சந்நதியில் நின்றகோலத்தில் அருள்கிறாள்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே