212. விரகற நோக்கியும்


ராகம்: மனோலயம்தாளம்: ஆதி
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்
விழிபுனல் தேக்கிடஅன்புமேன்மேல்
மிகவுமி ராப்பகல் பிறிதுப ராக்கற
விழைவுகு ராப்புனையுங்குமார
முருகஷ டாக்ஷர சரவண கார்த்திகை
முலைநுகர் பார்த்திபஎன்றுபாடி
மொழிகுழ றாத்தொழு தழுதழு தாட்பட
முழுதும லாப்பொருள்தந்திடாயோ
பரகதி காட்டிய விரகசி லோச்சய
பரமப ராக்ரமசம்பராரி
படவிழி யாற்பொரு பசுபதி போற்றிய
பகவதி பார்ப்பதிதந்தவாழ்வே
இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட
எழுகிரி யார்ப்பெழவென்றவேலா
இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய
எழுகரை நாட்டவர்தம்பிரானே.

Learn The Song




Manolayam (Janyam of 15th Mela MayamalavaGowlai) By Chitra Nagaraj

Arohanam: S R₁ M₁ P D₁ Ṡ    Avarohanam: Ṡ N₃ D₁ P M₁ R₁ S

Paraphrase

விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் (viragaRa nOkkiyum urugiyum vAzhththiyum) : I would like to look right into Your eyes without any manipulation, with a melting mind and singing Your glory with, விரகு = வஞ்சனை, தந்திரம்;

விழி புனல் தேக்கிட அன்பு மேன்மேல் மிகவும் (vizhi punal thEkkida anbu mEnmEl migavum) : my eyes filled with tears; my love for You swelling constantly; and

இராப்பகல் பிறிது பராக்கற (irA pagal piRidhu parAkkaRa) : day and night, I should concentrate only on You and nothing else.

விழைவு குராப் புனையுங் குமார (vizhaivu kurA punaiyum kumAra) : "Oh KumarA, You love to wear garlands of kurA flowers;

முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப (muruga shadAkshara saravaNa kArththigai mulai nugar pArththiba) : Oh MurugA, ShadAksharA (six-lettered Lord), SaravaNabavA, Oh King, who as a child suckled the breasts of Karthigai women"

என்று பாடி மொழி குழறாத் தொழுது அழுதழுது (endru pAdi mozhi kuzhaRAth thozhuthu azhuthu azhuthu ) : I would like to sing thus, worship with fumbling words and repeated cries,

ஆட்பட முழுதும் அலாப்பொருள் தந்திடாயோ (Atpada muzhudhum alApporuL thandhidAyO) : and be completely under Your sovereignty; For this, would You not give me the Eternal Knowledge that is beyond anything else in this world? உலகப் பொருட்கள் யாவற்றையும் கடந்த ஞானப் பொருளை அடியேனுக்குத் தரமாட்டாயா?
முழுதும் அலாப்பொருள் = இந்த உலகம் முழுவதும் பரவி இருக்கும் பொருட்கள் ஒன்றும் இல்லாத (அவற்றை கடந்த) பொருள்;

பரகதி காட்டிய விரக (paragathi kAttiya viraga) : You showed me the path to Eternal Bliss, Oh the Cleverest One! உபதேச மூலமாக மோக்ஷ வீட்டைக் காட்டிய சாமர்த்தியசாலியே,

சிலோச்சய பரம பராக்ரம (silOcchaya parama parAkrama) : You are the King of all mountains! You are the greatest warrior! குறிஞ்சி நிலத் தலைவரே! சிறந்த வலிமை உடையவரே! சிலோச்சய/சிலா+உஜ்ஜய (silOchchaya/sila+ujjaya) : one who has won over the mountain; மலை அரசனே,

சம்பராரி பட விழியாற் பொரு பசுபதி (sambarAri pada vizhiyAR poru pasupathi) : Shiva who burnt down Manmathan (Love God) by the glance of His fiery eye; சம்பரனைக் கொன்ற மன்மதன் சாம்பலாய் அழிய நெற்றிக்கண் கொண்டு போர் செய்த சிவபெருமான் சம்பராரி (sambarAri) : enemy of Sambaran, Manmatha;

போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே ( pOtriya bagavathi pArppathi thandhavAzhvE) : worshipped Bhagavathi, also known as PArvathi, and she delivered You, our Treasure!

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட (iraikadal theeppada nisicharar kUppida) : The sea with noisy waves caught fire; the demons (asuras) started yelling and screaming;

எழுகிரி ஆர்ப்பெழ வென்ற வேலா (ezhugiri yArppezha vendravElA) : and the seven hills of Mount Krouncha group shook violently, when You won Your victory, Oh Lord with the Spear!

இமையவர் நாட்டினில் நிறைகுடி ஏற்றிய (imaiyavar nAttinil niRaikudi yEtriya) : You redeemed DEvAs' land and settled them there safely!

எழுகரை நாட்டவர் தம்பிரானே.(ezhukarai nAttavar thambirAnE.) : You are praised by the people of EzhukarainAdu, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே