கந்தர் அநுபூதி 1-5

கந்தர் அநுபூதி பத்தாம் திருமுறை திருமந்திரம் நூலுக்கு ஒப்பாக கருதப்படுகிறது. இடையன் உடலுக்குள் திருமூலர் புகுந்து திருமந்திரம் சொன்னது போல அருணகிரிநாதர் கிளி உடலுக்குள் இருந்துகொண்டு இந்த நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.

“அநுபூதி” என்றால் நேரடியான ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியத்தை அடையும் சுய-அநுபவம். இதுவே இரண்டற்ற அல்லது அத்வைத ஐக்கியநிலையான ஆத்ம-சாக்ஷாத்காரம். மனமும், அஹமும் ஓடுங்கும் பொழுது ஆத்ம ஞானம் ஒளி விட ஆரம்பிக்கின்றது. விளக்கத்திற்கு அப்பாற்பட்ட, எதோடும் ஒப்பிட இயலாத, ஒரு அனுபவம் தான் ஆத்ம சாக்‌ஷாத்காரம். இந்த நிலையில் இறைவனையே எல்லாவற்றிலும் காண்பதோடல்லாமல், அவனை எல்லாமுமாகப் பக்தன் காண்கிறான். அவனுக்கு, இறைவன் அனைத்திலும் இருக்கிறான்; இறைவனே அனைத்துமாக இருக்கிறான்; உள்ளேயும் இறைவனே, வெளியிலும் இறைவனே, அனைத்தும் இறைவனே, எங்கும் இறைவனே. இறைவனே வழியும் (மார்க்கமும்), இலக்கும் (முடிவும்). இது ஒரு ஜீவன்முக்தர்களால் அநுபவிக்கப்படும் சகஜ அவஸ்தை என்று குறிப்பதான தெய்வீகமயமான அனுபவம். இது விவரிக்கக்கூடிய ஒன்று அல்ல, அநுபவிக்கப்பட வேண்டிய ஒன்று.

Learn From Guruji


ராகம்: ஹம்சத்வனி தாளம் : ஆதி
காப்பு
நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொற் புனை மாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.
nenja kanakallu negizhnDu uruga
thanjath aruL shaNmukhanuk iyal sEr
chenjol punai maalai chiRanDidavE
panjakkara aanai paDam paNivOm

I desire to string an exquisite garland of poems with fertile Tamil words, which can mellow down and thaw even the callous and the frigid hearts. In order that I can adorn Shanmukha, the Lord who offers His protection to those who seek His refuge, with such a garland, I bow before the feet of the five-armed Vinayaka (and/or Shiva, the Lord of the Panchakshara).

கல்லைப் போன்ற கடினமான உள்ளம், பக்தியினால் உருகும்படிக்கு, " 'சரணம்' என்று தம்மை வந்தடைந்தவர்களுக்கு அருள்புரியும் ஆறுமுகனுக்கு, எல்லா இலக்கண அம்சங்களும் பொருந்திய செம்மையான இலக்கியத் தமிழ்ச் சொற்களால் புனையப்பட்ட தமிழ் மாலை சிறப்பாக அமையும் பொருட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப்பெருமானின் (அல்லது 'பஞ்சக்கரவானை' என்று வைத்துக்கொண்டால் பஞ்சாட்சரத்தின் தலைவனான சிவபெருமானின்) அருளை நாடி துதிப்போம்.

1
ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே.
aadum parivEl aNi sEvalena
paadum paNiyE paNiyaa aruLvaay
thEdum kayamaa mukanai cheruvil,
saadum thani yaanai sagOtharanE

Bless me with the boon that I always sing 'Oh dancing horse-like Peacock, Oh powerful Vel, Oh beautiful Rooster' and make it my lifetime service! You are the brother of the incomparable Vinayaka who slayed the elephant-faced Gajamukhasura who sought to fight the celestials on the battle-field. பரி (pari ): horse;

‘பிரணவ நடனம் ஆடி வரும் [குதிரையைப்போன்ற] மயில், வேல், மற்றும் அழகியசேவல்’ என்று பாடும் பணியையே எனது நிரந்தரமான புனிதப் பணியாகத் தந்தருள்வாயாக. தேவர்களை தேடிச் சென்று போருக்கிழுத்துத் துன்புறுத்தி வந்த யானையின் முகத்தையுடைய கஜமுகன் என்ற அசுரனைப் போரில் வென்ற ஒப்பற்ற பிரணவ சொரூபியான விநாயகப்பெருமானின் இளைய சகோதரனே!

இச்செய்யுளின் முதற்சொல்லான ‘ஆடும்’ என்ற சொல்லில் ‘ஓம்’ என்கிற ஓங்கார மந்திரத்தின் அட்சரங்களான ‘அ’, ‘உ’, ‘ம’ என்ற மூன்று எழுத்துக்களும் அடங்கியுள்ளன. ஆடியவாறு நிற்கும் மயில் ‘ஓம்’-ஐ குறிக்கும். வேல் என்றால் ‘பேரறிவு’ (அ) ஆத்மஞானம். விடியற்காலையில், சேவல் கூவி சூரியனின் வருகையை உலகிற்கு அறிவிக்கும்; கந்தப் பெருமானின் கொடியில் இருக்கும் சேவல், ஞான-சூரியனின் உதயத்தை (மெய்ஞானத்தை) சுட்டிக்காட்டும். ஆடும்பரி வேல் அணிசேவல் அதாவது, ‘வேலும் மயிலும் துணை’ ஒரு மந்திரமாக கருதப்படுகிறது.

ஒரு காலைத் தூக்கி தோகையை விரித்து ஆடும் மயிலின் தோற்றம் தமிழில் 'ஓ' எழுத்தை நினைவூட்டும். சேவலின் நாதமும் 'ஓ' காரத்தை ஒத்திருக்கிறது. மயில் என்பது பிந்து. சேவல் என்பது நாதம். இவை இரண்டையும் கண்டறிந்து அனுபவிக்க ஞானம் தேவை. வேல் ஞான சொரூபம். ஆதலால் பிரணவத்தின் பொருளை அறியவும் அதன் நாதத்தை சுய அனுபவமாக அனுபவிக்கவும் தனக்கு வரமாகப் பெற அவற்றை எப்போதுமே பாடிக்கொண்டிருப்பதையே பாடும் பணியையே வரமாகக் கேட்கிறார். (Thiru S.Nadarajan, Chennai)

2
உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ?
எல்லாம் அற, என்னை இழந்த நலம்
சொல்லாய், முருகா சுரபூ பதியே.
ullasa niraakula yOga iDha
chalaabha vinoDanum nee alaiyO
ellam aRa ennai izhanDa nalam
chollay murugaa sura bhoopathiyE

Aren't You mirthful, devoid of worry, a yogi, a benefactor, one who dallies with His devotees and engages in playful games? Oh, Muruga, the king of Celestials! Teach me how to rid myself of all attachments and thoughts of "I" and "Mine".

Each of the attributes of Muruga in the first two lines indicate each one of the six abodes.
ullaasa – mirth – connotes Thirupparankundram where Murugan marries Deivayanai.
niraakula – devoid of worry – Tiruchendur where Murugan annihilates Suran.
Yoga – Avinankudi where Murugan stands as a Yogi
itham – soothing/pleasant – Swamimalai where Murugan preached the meaning/significance of Pranava Mantra to his father Shiva.
Sallaabham – dalliance – Thiruththanigai where Murugan woos and marries Valli
vinOtham – Pazhamuthirsolai where Murugan playfully sheds jamun fruits on the ground for Ouvaiyaar.

“ஓ முருகப் பெருமானே, நீ ஆறுவிதமான பண்புகளை உடையவன்; பற்றுக்களிலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுதலை தரும் உயர் ‘நலம்’ (அநுபூதி) பெறுவது பற்றி எனக்கு அறிவுறுத்துவாயாக.” பேரின்ப சொரூபமானவனே! துக்கங்கள் துன்பங்கள் அற்றவன் நீ. எப்பொழுதும் யோகத்தில் (அ) சகஜ சமாதியிலிருக்கும் ஒரு மகாயோகி நீ. நன்மை பயப்பவன் நீ (கலிக்கு ஒப்பிற் சலிப்பற்றுக் கதிக்கு ஒத்திட்டு ...எனக்குச் சற்று, வினவி முன் அருள் செய்து பாங்கின் ஆள்வதும் ...பரிமள மிகவுள ). அடியார்களிடம் இனிமையாகவே பேசி திருவிளையாடல் புரிபவனும் நீயே அன்றோ! அதியற்புதங்களைப் புரியும் லீலா-விநோதன் நீ (நெறி முறை முதல் கூறும் லீலா விதம் -- மூலா நிலமதின், மருவும் அடியார்கள் மனதில் விளையாடு... திருமகள் உலாவும்).

ஸத்-சித்-ஆனந்தம் என்ற மூன்றும் பிரமத்தின் சொரூப லட்சணம். என்றும் இருப்பது ஸத், எல்லாவற்றையும் அறிவது சித், குறைவற்ற இன்பம் ஆனந்தம். இறைவனின் ஆறு விசேஷ குணங்களான உல்லாச, நிராகுல, யோக, இத, சல்லாப, வினோத, ஆகியவை முறையே ஆறு படைவீடுகளையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இந்த ஆறு படைவீடுகளும் நம் ஒவ்வொருவரின் சூட்சும சரீரத்தில் உள்ள ஆறு அதிஷ்டான சக்கரங்களின் அறிகுறி என்றும் கருதப்படுகிறது – ஆதலால், சண்முகப் பெருமான் இந்த ஆறு சக்கரங்களுக்கும் ஈஸ்வரன் ஆகிறார்.

3
வானோ? புனல் பார் கனல் மாருதமோ?
ஞானோ தயமோ? நவில் நான் மறையோ?
யானோ? மனமோ? எனை ஆண்ட இடம்
தானோ? பொருளாவது சண்முகனே.
vaanO punal paar kanal maaruthamO
jnaanO DayamO navil naan maRaiyO
yaanO manamO enai aaNda idam
thaanO poruLaavathu saNmuganE

Oh Shanmukha!! What is the Eternal Object/substance? Is it the Sky, Water, Earth, Fire or Wind? Is it perceivable through intellect? Is it the four Vedas that are recited? Is it the soul, referred to as "I"? Is it the mind? Probably it is the place where You took me under Your refuge!

The 'place' mentioned here is the transcendental mental/spiritual state conferred on the devotee by the Lord. The Lord assesses the Jiva's spiritual maturity and comes forward to take him into His fold. This state of compassion is the eternal, all-pervading substance and the "Real Object" is the conclusion that the poet draws.

நித்திய அழிவில்லாத பொருள் என்பது எது? ஆகாயமோ? தண்ணீரோ? நிலமோ? நெருப்போ? காற்றோ? அறிவு தோன்றும் இடமோ? ஓதப்படும் நான்கு வேதங்களோ? நான் என்கிற தத்துவமோ? மனமோ? என்னை ஆட்கொண்ட இடம் (நிலை) தானோ? (எதினின்றும் இவை எல்லாம் தோன்றினவோ, தோன்றியவை எல்லாம் எதனால் வாழ்கின்றனவோ, முடிவில் யாவும் எதில் ஒடுங்குகின்றனவோ அதுவே நித்ய வஸ்து என்று அறியலாம்.)

வேதாந்த தத்துவத்தில் நேதி-நேதி (இது அல்ல, இது அல்ல) என்று ஒரு கோட்பாடு உண்டு. எப்பொருளையும் தன் பகுத்தறிவின் துணைகொண்டு அது சார்பற்றதா, நித்தியமானதா, என்றெல்லாம் தீர்க்கமாக விசாரணை செய்து, அப்பொருள் அந்த வரையறைக்குள் வராவிட்டால் அதை இது (மெய்ப்பொருள்) அல்ல, இது அல்ல என்று தள்ளிக்கொண்டே வந்து, கடைசியில் அழிவில்லாததும், எவ்வித மாறுதல்களையும் அடையாததும், எதில் எல்லாம் ஒடுங்குமோ அப்பேற்பட்ட வஸ்துவை பரம்பொருள் என்று அறியலாம். அந்த மெய்ப்பொருள் (மெய்யுணர்வு) என்பது பஞ்ச பூதங்களும் அல்ல, புலன்சார் அறிவும் அல்ல, வேதங்களும் அல்ல, மனதும் அல்ல, ‘நான்’ எனப்படும் அகந்தையும் அல்ல (எல்லாம் அற). பஞ்ச மகாபூதங்கள் எனப்படும் மண், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் எனும் ஐந்து பெரும் பொருட்கள் வெவ்வேறு விகிதங்களில் ஒன்றுக்கொன்று இணைந்து பலவிதமாக சேர்ந்ததினால் உருவாகியவை. இவை உண்மைப் பொருள்களா? இல்லை. ஏனெனில், ஒருபொழுதும் மாறாமலும், மற்றும் என்றுமிருப்பது (முக்காலத்திலும் இருப்பது) எதுவோ, அதுதான் மெய்ப்பொருள். வேதங்கள் உண்மைப்பொருள் தத்துவத்தை தியானிக்கும் உத்திகளைத்தான் தருகின்றதே தவிர, அம்மெய்ப்பொருளை அடைய முடியாமல் திரும்புகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்திரியங்கள் தரும் தகவல்களுக்கேற்ப செயல்படும் மனமும் உண்மைப்பொருள் இல்லை. நானெனும் அகந்தை ஸத்துவம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களின் சேர்க்கையால் தோன்றியது. புத்தி, அகந்தை, மனம், இந்திரியங்கள் ஆகிய கருவிகளின் மூலமாக நானெனும் அகந்தையாக செயல்படும்போது, அது அவைகளால் கட்டுப்படுத்தப் படுகிறது. ஆனால், மேற்கூறியவாறு விசாரணை செய்வதன் மூலம் தன்னை உலகப் பொருள்களின் மீதான நாட்டத்திலிருந்து விலகி கொண்டு, அதாவது முதலில் பொறிகளுக்குள்ளிருந்து திரும்பி மனதுக்கும், மனதிலிருந்து புத்தி, மற்றும் அதிலிருந்து அகந்தைக்கும் படிப்படியாக பின்வாங்கிக் கொண்டு, ஆன்மசாதனை செய்யும் பொழுது, முன்னர் அவைகளால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளிலிருந்து படிப்படியாக விடுபட்டு, இறுதியில் தன் இதயத்தில் உறையும் ஆதாரமான ஆத்மாவில் தன்னை முழுவதுமாக இழக்கிறது; ஆத்மாவில் ஆட்கொள்ளப்படுகிறது. அந்த ஆத்மா, “எனை ஆண்ட இடம்” ஆகிய “தான்”; அதுவே “பொருள்”. உண்மைப் பொருள், பரம்பொருள் தத்துவம்; அதுவே ஷண்முகப் பெருமான்.

4
வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.
vaLaipatta kai maathodu makkaL enum,
thaLaipat- tazhiya thagumO thagumO
kiLaipat- tezhu soor uramum giriyum
thoLai pattuRuvath thodum vElavanE

Is it fair that I am fettered by the attachment to the bangle-wearing wife and children? You wielded the 'vel' that pierced through Surapadman's chest who came to the battle surrounded by his kinsmen and also shattered Krauncha mountain!

கையில் வளையல் அணிந்த பெண் (மனைவி) மற்றும் குழந்தைகள் என்னும் குடும்பத்தளையில் கட்டுப்பட்டு சிக்கி நான் அழிகிறேனே. இது (உன் பெருமைக்கு) தகுதியோ? பெருமானே, இது முறையோ? முருகா! உனக்கெதிராகத் தன் சுற்றம் புடைசூழப் போருக்கு வந்த சூரபத்மனின் மார்பையும் க்ரௌஞ்ச மலையையும் துளைத்து ஊடுருவிப் போகுமாறு வேலைச் செலுத்திய வேலாயுதப் பெருமானே!

இங்கு மலை எனப்படுவது கர்மா; சூரபத்மன் என்பது அறியாமையாகிய அகந்தையின் குறியீடு. எவ்வாறு மலையும், அசுரனும் கந்தப் பெருமானின் வேலால் மட்டுமே அழிக்கப்பட இயலுமோ, அவ்வாறே கர்மமும், அறியாமையும் ஞானத்தால் மட்டுமே அழிக்கப்பட இயலும்.

5
மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.
maka maayai kaLianDida valla piraan,
mukham aaRum mozhinDu mozhinDilanE
agamaadai madanDaiyar enR- ayarum
sagamaayaiyuL nindru thayanguvathE

Despite the spiritual expositions given to me by the six-faced Lord who can drive away powerful illusions prevailing in life, I am still caught up in the deceitful lure of land (or, house), wealth and women and am being hesitant to extricate myself from it.

ஆறுமுகப் பெருமான் மகாமாயையே அழிக்கக் கூடிய திறமை கொண்டவர். “ஆறுமுகம்”, “ஆறுமுகம்” என்று நான் அவர் பெயரைப் பலமுறை ஜபித்துக் கொண்டிருக்கிறேன். இருந்தும், மனதைச் சோர்வு அடையச்செய்யும் வீடு (மண்ணாசை), சொத்து (பொன்னாசை), மனைவி (பெண்ணாசை) ஆகிய உலகமாயையில் சிக்கி கலங்கிக் கொண்டிருப்பதிலிருந்து நான் இன்னும் விட்டு விலகப்பெறவில்லையே.

அல்லது
பல வழிகளில் முருகனே தன் ஆறு முகங்களாலும் தத்துவங்களை உபதேசித்து அருளி இருந்தும் நான் மாயையில் சிக்கித் தவிக்கிறேனே! மனதைச் சோர்வு அடையச்செய்யும் வீடு (மண்ணாசை), சொத்து (பொன்னாசை), மனைவி (பெண்ணாசை) ஆகிய உலகமாயையில் சிக்கி கலங்கிக் கொண்டிருப்பதிலிருந்து நான் இன்னும் விட்டு விலகப்பெறவில்லையே.

Find the links for other Anubhoothi shlokas anubhoothi here

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே