181. புற்புதம்


ராகம் : நவரச கன்னடாதாளம் : ஆதி
புற்புதமெ னாம அற்பநிலை யாத
பொய்க்குடில்கு லாவுமனையாளும்
புத்திரரும் வீடு மித்திரரு மான
புத்திசலி யாதபெருவாழ்வு
நிற்பதொரு கோடி கற்பமென மாய
நிட்டையுடன் வாழுமடியேன்யான்
நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
நிற்கும்வகை யோதநினைவாயே
சற்பகிரி நாத முத்தமிழ்வி நோத
சக்ரகதை பாணிமருகோனே
தர்க்கசமண் மூகர் மிக்ககழு வேற
வைத்தவொரு காழி மறையோனே
கற்புவழு வாது வெற்படியின் மேவு
கற்றைமற வாணர்கொடிகோவே
கைத்தஅசு ரேசர் மொய்த்தகுல கால
கற்பதரு நாடர்பெருமாளே.

Learn The Song




Paraphrase

புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் (puRpudham en nAma aRpa nilaiyAdha poy kudil) : My body is a hut that is insignificant and short-lived like an air bubble; புற்பதம் (purputham) : water bubble; பொய் குடில் (poy kudil) : false hut, body;

குலாவு மனையாளும் புத்திரரும் வீடு மித்திரருமான (kulAvu manaiyALum puththirarum veedu miththirarum Ana) : and my wife who sports with it, my children, house and my friends;

புத்தி சலியாத பெரு வாழ்வு நிற்பது ஒரு கோடி கற்பம் (buththi saliyAdha peruvAzhvu niRpadhoru kOdi kaRpam) : I am not agitated or bored by them and firmly believe that my life will last a million years!

என மாய நிட்டையுடன் வாழும் அடியேன் யான் (ena mAya nishtaiyudan vAzhum adiyEn yAn) : I constantly live under this delusion;

நித்த(ம்) நின தாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே (niththanina thALil vaiththadhoru kAdhal niRkum vagai Odha ninaivAyE) : (to redeem me) consider teaching me the ways to ensure that the love I have for Your lotus feet stands for ever.

சற்ப கிரி நாத முத்தமிழ் விநோத (saRpagiri nAtha muththamizh vinOdha) : You are the Lord at the Serpent Mount (also known as ThiruchchengkOdu)! You love to delight in the three branches of Tamil.

சக்ர கதை பாணி மருகோனே (chakragadhai pANi marugOnE) : You are the nephew of Vishnu holding Sudarshana ChakrA and Kaumodaki mace in His hands!

தர்க்க சமண் மூகர் மிக்க கழு ஏற வைத்த ஒரு காழி மறையோனே (tharkka samaN mUgar mikka kazhu vERa vaiththa oru kAzhi maRaiyOnE) : You debated with the dumb SamaNA (Jain) sages and sent them to the gallows, Oh ThirugnAna SambandhA, the Brahmin Poet from SeerkAzhi! காழி (kazhi) : Seerkazhi;

கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற வாழ்நர் கொடி கோவே (kaRpu vazhuvAdhu veRpadiyin mEvu katrai maRa vANar kodi kOvE) : You are the consort of the creeper-like Valli who is perennially chaste and belongs to the fierce hunter clan living in the foothills of VaLLimali; வெற்பு அடி (veRpu adi) : at the foothills of the mountain (Vallimalai); மற வாழ்நர்(maRa vazhnar) : மறம் என்ற சொல்லில் தீரம், வீரம், சினம், சீற்றம், வலிமை, ஆற்றல், வெற்றி, அமர், அழித்தல், கொல்லல் என பத்துப் பண்புகளும் அடங்கியிருக்கிறது. மற வாழ்நர் என்றால் இத்தகைய பண்புடைய குலத்தவர்; fierce tribes, hunters;

கைத்த அசுரேசர் மொய்த்த குல கால (kaiththa asurEsar moyththakula kAla) : You were the Death-God for the closeknit clans of demons who hated You! வெறுப்புடைய அசுரத் தலைவர்களின் நெருங்கிய குலத்துக்கு முடிவைச் செய்தவரே!

கற்ப தரு நாடர் பெருமாளே (kaRpatharu nAdar perumALE) : You are cherished by DEvAs in whose land is the KaRpaga Tree, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே