மயில் விருத்தம் – 6 : சங்கார காலம்

ராகம் : சிந்துபைரவி தாளம்: கண்டசாபு

சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்

சந்த்ரசூ ரியரொளித் திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனிநாட கஞ்செய்த போதந்த
காரம் பிறந்திட நெடுங்

ககனகூட முமேலை முகடுமூ டியபசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்

சிங்கார குங்கும படீரம்ருக மதயுகள
சித்ரப் பயோ தரகிரித்

தெய்வவா ரணவநிதை புனிதன் குமாரன்
திருத்தணிமகீரதன் இருங்

கெங்கா தரன்கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்தி கேயன்

கீர்த்திமா அசுரர்கள் மடியக்ர வுஞ்சகிரி
கிழிபட நடாவு மயிலே.


Learn The Song



Paraphrase

சங்கார காலம் என அரி பிரமர் வெருவுற சகல லோகமும் நடுங்க ( sangaara kaalamena aribiramar veruvuRa sakala lOkamu nadunga) : Fearing it to be the time of dissolution at the end of the four yugas, Vishnu and Brahma tremble; all the worlds quiver in fear;

சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும் சஞ்சலப்பட (chandhra sooriyar oLiththu indhraadhi amararum sanchalap pada ) : the sun and the moon hide themselves; Indra and other celestials get worried;

உமையுடன் கங்காளர் தனி நாடகம் செய்த போது அந்தகாரம் பிறந்திட (umaiyudan gangaaLar thani naadagam seydhapOdh andha kaaram piRanDida ) : when Parvati and Shiva who wears a garland of skeletons stage a play, and darkness engulfed everything;

நெடும் ககன கூடமும் மேலை முகடு மூடிய பசும் கற்றைக் கலாப மயிலாம் (nedum gagana koodamu mElai mugadu moodiya pasung katrai kalaapa mayilaam) : the peak of the cosmic sphere and the sky got hidden when the peacock spread its greenish plumes;

சிங்கார குங்கும படீர ம்ருக மத யுகள சித்ரப் பயோதர கிரித்தெய்வ வாரண வநிதை (singaara kungkuma pateera mrugamadha yugaLa chithrap payOdhara giri dheyva vaaraNa vanithai ) : With beautiful, kumkuma- and kasturi-smeared twin mountainous breasts, and brought up by the divine elephant, is Deivayaanai; பேரழகுடைய குங்கும நிறங் கொண்ட சாந்துக் கலவையையும், கஸ்தூரியையும் புனைந்த, இரண்டு அழகிய மலை போன்ற மார்பகங்களைக் கொண்ட தெய்வீகம் பொருந்திய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட தேவயானையின், பயோதர = पय (drink)+ उदर (belly) = மார்பகங்கள்;

புனிதன் குமாரன் திருத்தணி மகீரதன் இருங் ( punidhan kumaaran thiruththaNi maheedharan irung) : Deivayanai's consort is the ever young Kumara who resides at ThiruththaNi hills,

கெங்காதரன் கீதம் ஆகிய சுராலயன் க்ருபாகரன் கார்த்திகேயன் (gengaa dharan geetham aagiya suraalaya krupaakaran kaarththikEyan) : Borne by Ganga, and repository of the seven svaras composing music; compassionate, son of Krittika maidens; கீதம் ஆகிய சுராலயன் = சங்கீதத்திற்கு ஆதாரமான, 'சட்ஜம்', 'ரிஷபம்', 'காந்தாரம்', 'மத்யமம்', 'பஞ்சமம்', 'தைவதம்' எனப்படும் ஆறு சுரங்களும் முருகப் பெருமானின் ஆறு திருமுகங்களிலிருந்து தோன்றியவைகளாகும். ஏழாவது சுரமாகிய 'நிஷாதம்' முருகப் பெருமானின் வாகனமாகிய மயிலிலிருந்து தோன்றியது.

கீர்த்தி மாஅசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி கிழி பட நடாவு மயிலே. (keerththimaa asurargaL madiya kravunchagiri kizhipada nadaavu mayilE) : He rode the Peacock, splitting the Krauncha mountain and slaying the renowned and strong asuras.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே