மயில் விருத்தம் – 5 : சோதியிம வேதண்ட

ராகம் : பாகேஸ்வரி தாளம்: கண்டசாபு

சோதியிம வேதண்ட கன்னிகையர் தந்தஅபி
நயதுல்ய சோம வதன

துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதிநெடு மூதண்ட அண்டபகி ரண்டங்கள்
யாவுங் கொடுஞ்சி றகினால்

அணையுந்த னதுபேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்

நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்

நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியா குலன்சங் குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முரு கன்குமரன்
வரமுதவு வாகை மயிலே.


Learn The Song



>

Paraphrase

The Lord's peacock protects the entire universe (created by Parvati) with its wings, just like a peacock would shield the peahen's eggs;

சோதி இம வேதண்ட கன்னிகையர் தந்த அபிநய துல்ய சோம வதன (jOthiyima vEdhaNda kannikaiyar thandha abinaya thulya sOma vadhana) : She (Parvati) has the form of light; She was taken care of by the maids in the Himalaya mountains; She is decked amply; She is pure; Her face exudes cool light like the moon; அபிநய(abhinaya) : well dressed/decked; வேதண்டம் (vEthandam) : mountain; சோம வதன (soma vadana) : moon-like face; இம வேதண்ட கன்னிகையர் தந்த — இமயமலையிடத்தே மாதர்கள் தோழியராய் பாதுகாத்துத் தந்த;

துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம சுந்தரி பயந்த (thunga thrisooladhari gangaaLi sivakaama sundhari payandha ) : She holds the magnificent Trident; She wears the skeletons as a garland; She is for ever fond of Lord Shiva; She gave birth to

நிரைசேர் ஆதி நெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள் யாவும் (aadhinedu moodhaNda aNda bagiraNdangaL yaavum kodum siRaginaal) : a disciplined, well aligned, ancient and sprawling cosmos, நிரை சேர் (nirai sEr) : வரிசையாய் அமைந்துள்ள;

கொடும் சிறகினால் அணையும் தனது பேடை அண்டங்கள் என்னவே அணைக்கும் கலாப மயிலாம் (aNaiyum thanadhu pEdai aNdangaL ennavE aNaikkum kalabha mayilaam) : which the peacock hugs with its curved wings like it would guard the peahen's eggs.

Who is this peacock? It is the vehicle of the sovereign and fearless Lord Murugan and the nephew of Lord Vishnu.

நீதிமறை ஓது அண்ட முப்பத்து முக்கோடி நித்தரும் பரவு கிரியாம் நீலகிரி வேலவன் (neethimarai OdhaNda muppaththu mukkOti niththarum paravu giriyaam) : The 33 crores of devas living in various cosmic units who recite Vedas that teach dharma worship the hills at Thiruththani, and You (Murugan) reside in those blue hills! நீதியை வரையறுத்து கூறும் வேதங்களை ஓதும் பற்பல அண்டங்களில் வசிக்கும் 33 கோடி தேவர்கள் மெச்சும் திருத்தணியில் வாசம் செய்யும் வேல் ஏந்தும் முருகன்; நிராலம்பன் நிர்ப்பயன் நிர்வியாகுலன் (neelagiri vElavan niraalamban nirbbayan nirviyaakulan sanguvaaL) : He is autonomous or independent; He is fearless; He is without worry; நிராலம்பன் = சுதந்திரமானவன், எந்த பற்றுக்கோடும் இல்லாதவன்;

சங்கு வாள் மா திகிரி கோதண்டம் தண்டம் தரித்த புயன் மாதவன் முராரி திருமால் மதுகைட வாரி திரு மருகன் (maathigiri kOdhaNda dhaNdan dhariththa buyan maadhavan muraari thirumaal) : He is the nephew of Madhavan who holds the Panchajanya conch, Nandaki sword, the reputable Sudarshana chakra, the Saranga bow and Kaumethakam mace in his arms, the destroyer of the asura Mura, and the destroyer of the two asuras Madhu and Kaitabha; திகிரி (thigiri) : circle, wheel, discus;

முருகன் குமரன் வரம் உதவு வாகை மயிலே.(madhukaita vaari thiru marugan murugan kumaran varamudhavu vaagai mayilE) : The peacock of Murugan, the ever young Kumaran, ever victorious and generous with boons, (is the powerful vahana described in the first half of the poem). அடியார்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுக்கும் வெற்றி மயில் தான் அது.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே