167. மனையவள் நகைக்க


ராகம் : ரீதிகௌளை அங்க தாளம் 5½
(2 + 2+ 1½)
மனையவள் நகைக்க வூரி னனைவரு நகைக்க லோக
மகளிரு நகைக்க தாதைதமரோடும்
மனமது சலிப்ப நாய னுளமது சலிப்ப யாரும்
வசைமொழி பிதற்றி நாளுமடியேனை
அனைவரு மிழிப்ப நாடு மனவிருள் மிகுத்து நாடி
னகமதை யெடுத்த சேம மிதுவோவென்
றடியனு நினைத்து நாளு முடலுயிர் விடுத்த போது
மணுகிமு னளித்த பாதமருள்வாயே
தனதன தனத்த தான எனமுர சொலிப்ப வீணை
தமருக மறைக்கு ழாமுமலைமோதத்
தடிநிக ரயிற்க டாவி யசுரர்க ளிறக்கு மாறு
சமரிடை விடுத்த சோதிமுருகோனே
எனைமன முருக்கி யோக அநுபுதி யளித்த பாத
எழுதரிய பச்சை மேனியுமைபாலா
இமையவர் துதிப்ப ஞான மலையுறை குறத்தி பாக
இலகிய சசிப்பெண் மேவுபெருமாளே.

Learn The Song



Raga Reethigowlai (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 R2 G2 M1 N2 N2 S    Avarohanam: S N2 D2 M1 G2 M1 P M1 G2 R2 S


Paraphrase

மனையவள் நகைக்க ஊரில் அனைவரு(ம்) நகைக்க (manaiyavaL nagaikka Urin anaivaru nagaikka) : My wife laughs at me, and the entire town also laughs at me;

லோக மகளிர் நகைக்க (lOka magaLiru nagaikka) : all the women of this world laugh at me;

தாதை தமரோடும் மனம் அது சலிப்ப (thAdhai thamarOdum manamadhu salippa) : my father and all relatives are disgusted with me; தமர் (thamar) : relatives;

நாயனும் உ(ள்)ளம் அது சலிப்ப (nAyan uLamadhu salippa) : I, a humble dog, feel frustrated with all this,

யாரும் வசை மொழி பிதற்றி நாளும் அடியேனை (yArum vasaimozhi pidhatri nALum adiyEnai) : when everyday, everybody abused me thus;

அனைவரும் இழிப்ப நாடும் மன இருள் மிகுத்து (anaivarum izhippa nAdu manaviruL miguththu) : I became the target of everybdoy's jeering and my mind became totally dark.

நாடின் அகம் அதை எடுத்த சேமம் இதுவோ என்று அடியனும் நினைத்து நாளும் (nAdin agamadhai eduththa sEmam idhuvOvendru adiyanu ninaiththu nALum) : I brooded over it, I kept thinking "What is the purpose of my life in this body?".

உடல் உயிர் விடுத்த போதும் அணுகி முன் அளித்த பாதம் அருள்வாயே (udaluyir viduththa pOdhum aNugi munaLiththa pAdham aruLvAyE) : and prepared to kill myself, You came towards me then and bestowed thy feet me. Will You grace me with those feet again? (This happened in the life of the poet Saint Arunagirinathar when he plunged down from the high tower (gopuram) of the temple at Tiruvannamalai.)

தனதன .............என முரசு ஒலிப்ப (thanathana thanaththa thAna ena murasu olippa) : The drums beat to the meter "thanathana thanaththa thAna";

வீணை தமருகம் மறை குழாமும் அலை மோத (veeNai thamaruga maRai kuzhAmum alai mOdha) : and the instrument VeenNai, hand-drums (udukkai) and the chanting of VEdAs by multitude of people were all sounding like sea waves, when

தடி நிகர் அயில் கடாவி அசுரர்கள் இறக்குமாறு (thadi nigar ayil kadAvi asurargaL iRakkumARu) : You hurled Your spear, shining like a lightning at the demons (asuras), killing them; தடி (thadi) : lightning;

சமர் இடை விடுத்த சோதி முருகோனே (samar idai viduththa jOthi murugOnE) : in the battlefield, Oh MurugA, the Luminous One! சமர் (samar) : war;

எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத (enai manam urukki yOga anubuthi aLiththa pAdha) : My heart simply melted when You preached me the yOgA Experience by showing Your lotus feet!

எழுத அரிய பச்சை மேனி உமை பாலா (ezhudha ariya pacchai mEni umai bAlA):You are the son of UmAdEvi who has an emerald-green complexion that is simply inexpressible!

இமையவர் துதிப்ப ஞான மலை உறை குறத்தி பாகா (imaiyavar thudhippa gnAna malaiyuRai kuRaththi pAga) : All the DEvAs praise You at GnAnamalai which is Your abode and Your consort VaLLi, the damsel of the KuRavAs!

இலகிய சசி பெண் மேவு பெருமாளே.(ilagiya sasippeN mEvu perumALE ) : You are also the consort of beautiful DEvayAnai, the daughter of IndrANi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே