162. எழுதிகழ் புவன


ராகம்: பேகடாமிஸ்ரசாபு (2 + 1½)
எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில்வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவதொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியுமுருகேசா
மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வதழகோதான்
முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவளமிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழககுருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதயமுறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடையபெருமாளே.

Learn The Song



Raga Begada (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 R2 G3 M1 P D2 P S    
Avarohanam: S N3 D2 P M1 G3 R2


Paraphrase

எழு (ஏழு) திகழ் புவனம் நொடி அளவு அதனில் (ezhu thigazh buvana nodi aLavu adhanil) : Going around the Universe comprising seven worlds in a matter of a second, இந்தப் பிரபஞ்சத்தில் பதினான்கு உலகங்கள் உண்டு. மேலுலகங்கள் ஏழு மற்றும் கீழுலகங்கள் ஏழு. நாம் வாழும் மேலுலகத்தில் உள்ள பூவுலகிற்கு மேல் ஆறு உலகங்கள் இவை : புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனோலோகம், தபோலோகம், சத்யலோகம்.

இயல் பெற மயிலில் வருவோனே (iyal peRa mayilil varuvOnE) : You flew elegantly on Your peacock! இயல் பெற = அழகு விளங்க;

இமையவர் பரவி அடி தொழ (imaiyavar paravi adi thozha) : While the DEvAs praised and prostrated at Your holy feet,

அவுணர் மடிவு உற விடுவது ஒரு வேலா (avuNar madivuRa viduvadhoru vElA) : You flung Your unique spear to kill the asuras;

வழுதியர் தமிழில் ஒரு பொருள் அதனை வழி பட மொழியும் முருகேசா (vazhudhiyar thamizhin oruporuL adhanai vazhipada mozhiyu murugEsA) : You explained the significance of agapporuL grammar In Tamil, which flourished under the patronage of Pandya kings, at the request of learned ones, Oh my Lord Muruga! பாண்டியர்கள் போற்றி வளர்த்த தமிழில் ஒப்பற்ற பொருளதிகாரத்தின் உரையை சங்கப் புலவர்கள் வழிபட்டு நிற்க ஆராய்ந்து உரைத்த முருகக் கடவுளே! வழுதியர் (vazhuthiyar) : the Pandya kings; ஒரு பொருள் = ஒப்பற்றதாகிய அகப்பொருள் இலக்கணம்;

மலர் அடி பணியும் மட மகள் (malar adi paNiyum madamagaL) : This naive girl of mine who worships Your lotus feet,

பசலை மயல் கொடு தளர்வது அழகோ தான் (pasalai mayalkodu thaLarvadhu azhagO thAn) : is consumed by her love for You and is suffering from weakness. Is it fair? (This is the voice of the girl's mother.)

The following lines describe the natural environs of Mudhumalai or Vrutthachalam. விருத்தாசலத்தில் உள்ள பழமலைநாதர் கோயிலில் சைவ சமயத்தில் உள்ள 28 ஆகமங்கள் 28 லிங்கங்களாக முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக வரலாறு. இது கடலூர் (அல்லது கூடலூர்) மாவட்டத்தில் உள்ளது. மூன்று ஆறுகள் (பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு) கடலில் கலக்கும் இடம் ஆகையால் இயற்கை வளத்திற்கு பஞ்சமில்லை. தற்காலத்தில் இரசாயன தொழிற்சாலைகள் மிகுந்ததினால் பெரிதும் மாசுபட்ட சூழ்நிலையே நிலவுகிறது.

முழுகிய புனலில் இன மணி தரளம் (muzhugiya punalil ina maNi tharaLa) : Plunging into the river to scoop a variety of pearls and gems, தரளம் ( tharaLam) : pearls; இன மணி ( ina maNi) : collections/groups of maNi or gems;

முறுகிடு பவளம் மிக வாரி (muRugidu pavaLa miga vAri) : (the gypsy girls) plaiting the pearls and gems with corals and முறுகிடு = முறுக்கிய, பின்னிய;

முறையொடு குறவர் மட மகள் சொரியும் (muRaiyodu kuRavar madamagaL soriyu) : the young gypsy girls gang up and shout their wares at Pazhamalai/Mudhumalai, near which flows the Manimuththaaru river.

முது மலை அழக குருநாதா (mudhumalai azhaga gurunAthA) : at Mudhumalai (Vriddhachalam), Your favourite place, my Master!

பழகிய வினைகள் பொடிபட (pazhagiya vinaigaL podi pada) : Destroy my Karma, which is a steady companion

அருளில் படிபவர் இதயம் உறு கோவே (aruLil padibavar idhayam uRukOvE) : You reside in the hearts of people who are immersed in Your grace

பரு வரை துணிய ஒரு கணை தெரிவ (paru varai thuNiya oru kaNai theriva) : You sent a choice weapon to destroy the huge mount of Krouncha. பரு வரை (paru varai) : huge mountain; பெருத்த கிரெளஞ்சமலை பிளந்து போகும்படி ஒப்பற்ற ஆயுதத்தை தேர்ந்தெடுத்துச் செலுத்தியவனே! தெரிவு = தேர்ந்தெடுத்தல்;

பல மலை உடைய பெருமாளே.(palamalai udaiya perumALE.) : Oh Great One, You are the Lord of several mountains!

Murugan as Rudrasarman

In Madhurai, SivA as SokkanAthar composed the poetical work 'iRaiyanAr agapporuL'. Forty eight poets wrote commentaries for it. But a question arose — whose commentary was the best? The poets were told that there was a boy called Rudrasanman, who could not speak, but was the best arbiter in the matter.

It was in fact Murugan who had embodied himself as Rudrasanman. When the poets read their commentaries, Rudrasarman was unresponsive, but when Nakkeerar read his commentary, Rudrasanman responded by shaking his body, and declared that the true meaning was conveyed in Nakkeerar's work - ThiruviLaiyAdal PurANam.

இறையனார் அகப்பொருள் வந்த வரலாறு



மதுரை மாநகரத்தின் அரசனான வம்ச சூடாமணி என்னும் பாண்டிய மன்னன் பெரும் பஞ்சத்தால் வாடிய தமிழ்ப் புலவர்களுக்கு தஞ்சம் அளித்து அவர்களை பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய அன்புக் கட்டளையிட்டான். அப்போது ஐந்து இலக்கணங்களில் முக்கியமான பொருள் இலக்கணம் சிதைந்து மறைந்திருந்ததால் எழுத்து, சொல், யாப்பு, அணி மட்டுமே இருந்தன.

பாண்டிய மன்னன் சோமசுந்தரப் பெருமானை வணங்கி, "தமிழ் தழைக்க அருள்புரிவீர்'' என்று வேண்டினான். சொக்கலிங்கப் பெருமானும்அறுபது சூத்திரங்கள் அடங்கிய "இறையனார் அகப்பொருள்' என்ற நூலை அருளிச் செய்து பீடத்தின் கீழ் வைத்தார்.

மறுநாள் காலை அர்ச்சகர் அந்த நூலைக் கண்டு அதை மன்னனிடம் கொண்டு சேர்த்தார். மன்னனும் புலவர்களிடம் அதைக் கொடுத்து, அந்நூலுக்கு உரை காண சொன்னான்.

நக்கீரர், கபிலர், பரணர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்கள் போட்டிக் கொண்டு உரை எழுதினார்கள். பாண்டியன் சோமசுந்தரப் பெருமானிடம் முறையிட்டு சிறந்த உரையை அடையாளம் காட்டச் சொல்லி வேண்டினான்.

அப்போது விண்ணிலிருந்து ஒலித்த அசரீரி "உருத்திரசன்மன் என்று பிறவி ஊமையிடம் எல்லா உரைகளை படித்துக் காண்பித்தால் உண்மையான உரையை அவன் கேட்கும்போது, கண்ணீர் சொரிந்து, ஆனந்தக் கூத்தாடுவான்'' என்றது! உடனே புலவர்கள் உருத்திரசன்மனை சகல மரியாதைகளுடன் பல்லக்கில் ஏற்றிக் கொணர்ந்து சங்கப்பலகை மீது அமர செய்து சுற்றிலும் அமர்ந்து தத்தம் உரைகளை உரைத்தார்கள்.

உருத்திரசன்மராய் அவதரித்தவர் உண்மையில் கந்தக் கடவுளே! புலவர்களின் உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தபோது சிலரது பொருளாழத்தை மெல்ல தலையசைத்து ரசித்தார். சிலர் உரையைக் கேட்டு முகம் சுளித்தார். கபிலர், பரணர் என்போர் தம் உரைகளை வாசித்தபோது ஆங்காங்கு மகிழ்ந்து தலையை அசைத்தார். நக்கீரனார் தம் உரையை வாசித்தபோது, ஒவ்வொரு சொல்லுக்கும் பொருட்சுவை நோக்கித் தலையசைத்து, மெய் புளங்கித்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, இதுவே உண்மையான, சிறப்பான உரை என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே