148. பத்தியால் யான்

ராகம் : ஆனந்த பைரவிதாளம்: ஆதி
(எடுப்பு 3/4 இடம்)
பத்தியால் யானுனைப்பலகாலும்
பற்றியே மாதிருப்புகழ்பாடி
முத்தனா மாறெனைப்பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்கருள்வாயே
உத்தமா தானசற்குணர்நேயா
ஒப்பிலா மாமணிக்கிரிவாசா
வித்தகா ஞானசத்திநிபாதா
வெற்றிவே லாயுதப்பெருமாளே

Learn The Song


Raga Ananda Bhairavi (Janyam of 20th mela Natabhairavi) Practice By Prince Rama Varma

Arohanam: S G2 R2 G2 M1 P D2 P S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S

Paraphrase

பத்தியால் யான் உனை பல காலும் பற்றியே (baththiyAl yAnunai palakAlum patriyE) : I should hold on to you with utmost devotion, பக்தி பூண்டு நான் நீண்ட நாட்களாக உன்னைப் பற்றுக் கோடாக வைத்து, (உள்ளத்தில் தியானித்து)

மா திரு புகழ் பாடி (mAthirup pugazh pAdi) : sing divine verses praising Your glory;

முத்தன் ஆமாறு எனை பெரு வாழ்வின் முத்தியே சேர்வதற்கு அருள்வாயே (muththan AmARu enai peruvAzhvin mutthiyE sErvadharkku aruLvAyE) : and become a liberated soul and attain eternal bliss: you bless me thus with Your grace. ஞான நிலை பெற்றவனாக ஆகும்படி என்னை சிறந்த வாழ்வாகிய முத்தி நிலையை அடைய அருள் புரிவாயாக.

உத்தமதான சற் குணர் நேயா! (uththama adhAna saR guNarnEyA) : You hold dear those who have lofty thoughts; உத்தம குணத்தைப் பற்றிக்கொண்டுள்ள நல்ல இயல்புள்ளவர்களின் நண்பனே!

OR
உத்தமா! தான சற் குணர் நேயா (uththamA dhAna saR guNarnEyA) : Oh Virtuous Lord! You hold dear those who have philanthropic/altruistic nature. உத்தமனே! ஈகைக் குணம் உடைய நல்ல குணம் படைத்தவர்களுக்கு நேசனே,

ஒப்பிலா மா மணி கிரி வாசா (oppilA mA maNik girivAsA) : You reside in the great and incomparable MaNigiri (Rathnagiri);

வித்தகா ஞான சத்தி நிபாதா (viththagA nyAna saththi nipAdhA) : Oh Learned One! You imprint the Knowledge of the Divine on our conscience. பேரறிவாளனே! ஞான பக்குவம் அடைந்தவர்களுக்கு அருள் சத்தியாக இருப்பவனே/திருவருள் ஞானத்தைப் பதியச் செய்பவனே! சக்தி நிபாதம் = சக்தி நன்கு பதிவது.

Explanation : The soul is fettered with limiting bonds of Anava mala. As long as anava mala dominates in a soul and obscures its power to know its true nature, liberation cannot occur.

When anava mala is weakened, Sivashakti / Tirodhana shakti descends immediately and unfolds in the form of Grace and makes the intensities of anava mala’s bonds ripe enough for removal. Finally, this shakti becomes Anugraha shakti and brings about wisdom and the unfoldment of consciousness.

ஒருவன் தான் செய்த நல்வினையின் பயனாக அனுபவிக்கும் இன்பத்திலும் தீவினைப் பயனாகிய துன்பத்திலும் உள்ளம் வேறுபடாது இரண்டையும் சரிசமமாக பாவித்து நுகரும் நிலைய இருவினையொப்பு எனப்படும். பெருமானை குறித்த ஞானத்தை அறியும் வேட்கை உயிர்கள் அடையாத வண்ணம் ஆணவமலம் தடுக்கின்றது. உயிர்கள் ஆணவமலத்தின் வலிமையை குறைத்து, புலன்களின் விருப்பத்தில் நாட்டம் கொள்ளாது, உண்மையான மெய்ப்பொருள் குறித்து அறிய தலைப்பட வேண்டும். ஆணவ மலத்தின் வலிமையை குறைக்கும் பொருட்டு, இறைவன் கன்மம் மாயை ஆகியவற்றை உயிர்களுடன் கூட்டி, இன்ப துன்பங்களை நுகரச் செய்கின்றான். இவ்வாறு நுகரும் தருணத்தில் உயிர்கள் மேலும் வினைகள் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் ஆணவ மலத்தின் வலிமையை படிப்படியாக குறைந்து இருவினையொப்பு அடைந்து மலபரிபாகம் ஏற்பட்டபின் நிகழ்வது சத்திநிபாதம். கணக்கற்ற பிறவிகளில் ஆணவமலத்தின் சக்தி உயிர்களின் அறிவை தடைப்படுத்தி வைத்திருந்த பிணிப்பு நெகிழ்ந்த பக்குவ நிலையில், இதுவரை திரோதானமாய் நின்று மறைப்பைச் செய்துவந்த இறைவனது சக்தி அருட்சக்தியாக மாறி அறிவு ஒளி வீசத் தொடங்குகிறது.

சத்தி என்பது இறைவனின் அருள். நிபாதம் என்றால் வீழ்ச்சி என்று பொருள். அந்நாள் வரை திரோதானமாக நின்று மறைப்பைச் செய்து வந்த இறைவனின் சக்தி, மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவில் பதியவதே சத்திநிபாதம். அத்தகைய ஞானத்தை அளிப்பபவனே என்கிறார் அருணகிரியார்.

வெற்றி வேலாயுத பெருமாளே. (vetri velAyudha perumAlE.) : You hold the victorious Spear as Your weapon! Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே