Sunday, 31 May 2015

140. முத்துத்தெறிக்க

ராகம்: மோகனம் தாளம்: கண்ட த்ருவம் (17)
முத்துத் தெறிக்கவள ரிக்குச் சிலைக்கைமதன்
முட்டத் தொடுத்தமலராலே
முத்தத் திருச்சலதி முற்றத் துதித்தியென
முற்பட் டெறிக்குநிலவாலே
எத்தத் தையர்க்குமித மிக்குப் பெருக்கமணி
இப்பொற் கொடிச்சிதளராதே
எத்திக் குமுற்றபுகழ் வெற்றித் திருத்தணியில்
இற்றைத் தினத்தில்வரவேணும்

Saturday, 30 May 2015

139. பொற்பதத்தினை

ராகம் : த்விஜாவந்தி/ ரஞ்சனி தாளம்: ஆதி (திச்ர நடை)
பொற்ப தத்தி னைத்து தித்து நற்ப தத்தி லுற்ற பத்தர்
பொற்பு ரைத்து நெக்கு ருக்கஅறியாதே
புத்த கப்பி தற்றை விட்டு வித்த கத்து நைத்து திக்க
புத்தி யிற்க லக்க மற்று நினையாதே
முற்ப டத்த லத்து தித்து பிற்ப டைத்த கிர்த்ய முற்றி
முற்க டைத்த வித்து நித்தமுழல்வேனை
முட்ட விக்க டைப்பி றப்பி னுட்கி டப்ப தைத்த விர்த்து
முத்தி சற்றெ னக்க ளிப்ப தொருநாளே

Monday, 25 May 2015

138. பருத்தபற் சிரத்தினை

ராகம் : ஹம்சானந்தி தாளம்: ஆதி-திச்ர நடை (2 களை/ 24)
பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
பரித்தவப் பதத்தினைப்பரிவோடே
படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
பசிக்குடற் கடத்தினைப்பயமேவும்
பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
பிணித்தமுக் குறத்தொடைப்புலனாலும்
பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
குறிக்கருத் தெனக்களித்தருள்வாயே

137. பகல் இராவினும்

ராகம் : தன்யாசி தாளம்: மிஸ்ரசாபு (1½ + 2)
பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண்டுடல்பேணிப்
பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ்சிலவோதி
அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந்தடைவோரை
அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந்திடலாமோ

Sunday, 24 May 2015

136. நினைத்ததெத்தனையில்

ராகம் : சிந்துபைரவி தாளம்: கண்டஜம்பை (8)
நினைத்த தெத்தனையிற் றவராமல்
நிலைத்த புத்தி தனைப் பிரியாமற்
கனத்த தத்து வமுற் றழியாமற்
கதித்த நித்தி யசித்தருள்வாயே
மனித்தர் பத்தர் தமக் கெளியோனே
மதித்த முத்த மிழிற் பெரியோனே
செனித்த புத்தி ரரிற் சிறியோனே
திருத்த ணிப்ப தியிற்பெருமாளே.

135. நிலையாத சமுத்திர

ராகம் : செஞ்சுருட்டி தாளம்: அங்க தாளம் (6½) 2½ + 1½ + 1 + 1½

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
நிசமான தெனப்பல பேசி யதனூடே
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
நினைவால்நி னடித்தொழில் பேணிதுதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
சலமான பயித்திய மாகி தடுமாறித்
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
தலமீதில் பிழைத்திட வேநினருள்தாராய்

Saturday, 23 May 2015

134. தொக்கு அறா

ராகம் : சுப பந்துவராளி தாளம்: சதுஸ்ர ஏகம் (4 களை) 1½ + 1½ + 1

தொக்கறாக் குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமுமலமாயை
துற்றகாற் பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலசமயநூலைக்
கைக்கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகுருதியாலே
கட்டுகூட் டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவதொருநாளே

Friday, 22 May 2015

Surpanakha and Vibhishana: Why Arunagirinathar Refers to Surpanakha As Vibhishana's Sister

In the poem தாக்கமருக்கொரு(thakkamarukkoru), Saint Arunagirinathar refers to Surpanakha as Vibishana's sister. As a demoness who was the cause behind Sita's abduction, it would have been more appropriate to refer to her as the treacherous Ravana's sister. After all, Vibhishana was virtuous and had nothing in common with Surpanakha. But the bard was looking for reasons behind Surpanakha's disfigurement by Lakshmana and refers here to a popular story about the past lives of Vibhishana and Surpanakha.

133. துப்பாரப்பார்

ராகம் : பெஹாக் தாளம்: ஆதி திச்ர நடை (12)
துப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக்குணமோகம்
துற்றா யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப்பிணிதோயும்
இப்பா வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற்பிறவாதே
எத்தார் வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத்தரவேணும்

Tuesday, 19 May 2015

132. தாக்கமருக்கொரு

ராகம்: கானடா தாளம்: ஆதி (எடுப்பு 1/2 இடம்0
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை தடுமாறிப்
போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியை நேரியபுலையேனை
போக்கவி டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள்புரிவாயே

Saturday, 16 May 2015

131. சினத்திலத்தினை

ராகம் : சாமா தாளம்: ஆதி 2 களை (எடுப்பு 3/4 இடம்)
சினத்தி லத்தினை சிறுமண லளவுடர்
செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர்
செனித்த தெத்தனை திரள்கய லெனபலவதுபோதா
செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை
செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு
செடத்தி லெத்தனை நமனுயிர் பறிகொள்வதளவேதோ
மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி
கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
வதைத்த தெத்தனை யளவிலை விதிகரமொழியாமல்
வகுத்த தெத்தனை மசகனை முருடனை
மடைக்கு லத்தனை மதியழி விரகனை
மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்புரிவாயே

130. சினத்தவர் முடிக்கும்

ராகம் : ஆபோகி தாளம்: கண்டசாபு (2½) (1½ + 1)
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும்
செகுத்தவ ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும்பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ்செயல்தாராய்

Friday, 15 May 2015

129. கொந்துவார்

ராகம் : நாதநாமக்க்ரியா தாளம்: 1½ + 2 + 2 + 2
கொந்து வார்குர வடியினு மடியவர்
சிந்தை வாரிஜ நடுவினு நெறிபல
கொண்ட வேதநன் முடியினு மருவியகுருநாதா
கொங்கி லேர்தரு பழநியி லறுமுக
செந்தில் காவல தணிகையி லிணையிலி
கொந்து காவென மொழிதர வருசமயவிரோத
தந்த்ர வாதிகள் பெறவரி யதுபிறர்
சந்தி யாதது தனதென வருமொரு
சம்ப்ர தாயமு மிதுவென வுரைசெய்துவிரைநீபச்
சஞ்ச ரீகரி கரமுரல் தமனிய
கிண்கி ணீமுக விதபத யுகமலர்
தந்த பேரருள் கனவிலு நனவிலு மறவேனே

Thursday, 14 May 2015

128. கிறிமொழி

ராகம் : லதாங்கி தாளம்: கண்டசாபு (1 + 1½)
கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்
கெடுபிறப் பறவிழிக் கிறபார்வைக்
கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்
கிகள்தமைச் செறிதலுற்றறிவேதும்
அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்
றறவுநெக் கழிகருக் கடலூடே
அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்
றடியிணைக் கணுகிடப் பெறுவேனோ

Wednesday, 13 May 2015

127. கனைத்து அதிர்க்கும்

ராகம்: கானடா தாளம்: அங்க தாளம் (11½)
(1½ + 1½ 1½ 1½ + 2 + 1½ + 2)


கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கடலொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழுதிங்களாலே
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தசரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைசழங்கலாமோ

126. கவடுற்ற சித்தர்

ராகம்: தேஷ் தாளம்: அங்க தாளம் (5) (1+ 1½ + 1½ + 1)
கவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்நற்
கடவுட்ப்ர திஷ்டைபற்பலவாகக்
கருதிப்பெ யர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க்
கருவிற்பு கப்பகுத்துழல்வானேன்
சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக்
கசரப்ப ளிக்கெனப்பொருள்தேடி
சகலத்து மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற்
சரணப்ர சித்திசற் றுணராரோ

Tuesday, 12 May 2015

125. கலை மடவார்

ராகம்: ஆனந்த பைரவி தாளம்: மிஸ்ரசாபு 3½ (2+1½)
கலைமட வார்தஞ் சிலையத னாலுங்
கனவளை யாலுங்கரைமேலே
கருகிய காளம் பெருகிய தோயங்
கருதலை யாலுஞ்சிலையாலுங்
கொலைதரு காமன் பலகணை யாலுங்
கொடியிடை யாள்நின்றழியாதே
குரவணி நீடும் புயமணி நீபங்
குளிர்தொடை நீதந்தருள்வாயே

Saturday, 9 May 2015

124. எனையடைந்த குட்டம்

ராகம்: ஆனந்த பைரவி தாளம்: திஸ்ர துருவம் திஸ்ர நடை
(16½) ( எடுப்பு /3/3/3 0)


எனைய டைந்த குட்ட வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு வலிபேசா
இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்குமிவையோடே
மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு மடியாதே
மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்திதரவேணும்

Friday, 8 May 2015

123. ஏது புத்தி

ராகம்: ஹம்சாநந்தி தாளம்: மிஸ்ரசாபு (3½)(1½ + 2)
ஏது புத்திஐ யாஎ னக்கினி
யாரை நத்திடு வேன வத்தினி
லேயி றத்தல்கொ லோஎ னக்குனிதந்தைதாயென்
றேயி ருக்கவு நானு மிப்படி
யேத வித்திட வோச கத்தவ
ரேச லிற்பட வோந கைத்தவர்கண்கள்காணப்
பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
தாளில் வைக்கநி யேம றுத்திடில்
பார்ந கைக்குமை யாத கப்பன்முன்மைந்தனோடிப்
பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
பார்வி டுப்பர்க ளோஎ னக்கிதுசிந்தியாதோ

Thursday, 7 May 2015

122. எனக்கென யாவும்

ராகம்: மாயாமாளவ கௌளை தாளம்: ஆதி
எனக்கென யாவும் படைத்திட நாளும்
இளைப்பொடு காலந் தனிலோயா
எடுத்திடு காயந் தனைக்கொடு மாயும்
இலச்சையி லாதென்பவமாற
உனைப்பல நாளுந் திருப்புக ழாலும்
உரைத்திடு வார்தங்் குளிமேவி்
உணர்த்திய போதந் தனைப்பிரி யாதொண்
பொலச்சர ணானுந்தொழுவேனோ்

121. எலுப்பு நாடி

ராகம்: ரீதி கௌளை தாளம்: அங்க தாளம் 7½ (1½ +2 + 2 +2)
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ சதிகாரர்
இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறுசமுசாரம்
கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர்கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ணுழல்வேனோ