118. உடலி னூடு போய்மீளு


ராகம்: தோடிஅங்கதாளம்
5½ (1½ + 1½ + 2½)
உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
உணர்வி னூடு வானூடு முதுதீயூ
டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
மொருவ ரோடு மேவாததனிஞானச்
சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
துரிய வாகு லாதீதசிவரூபம்
தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
தொடுமு பாய மேதோசொலருள்வாயே
மடல றாத வாரீச அடவி சாடி மாறான
வரிவ ரால்கு வால்சாய அமராடி
மதகு தாவி மீதோடி யுழல ரால டாதோடி
மடையை மோதி யாறூடு தடமாகக்
கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
கமல வாவி மேல்வீழு மலர்வாவிக்
கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
கருணை மேரு வேதேவர் பெருமாளே

udalinoodu pOymeeLum uyirinoodu maayaadha
uNarvinoodu vaanoodu mudhu theeyood
ulavai oodu neeroodu buviyinoodu vaadhaadum
oruvarOdu mEvaadha thani nyaanam
sudarinoodu naal vEdha mudiyinoodu moodaadu
thuriya vaaku laatheetha siva roopam
tholaivilaadha pEraasai thurisaRaadha OrpEdhai
thodum upaaya mEdhO sol aruLvaayE
madal aRaadha vaareesa adavi saadi maaRaana
varivaraal kuvaal saaya amaraadi
madhaku thaavi meedhOdi uzhavaraal adaadhOdi
madaiyai mOdhi aaRoodu thadamaaga
kadal pugaa mahaa meenai mudugi vaaLai thaan mEvu
kamala vaavi mEl veezhu malarvaavi
kadavuL neela maaRaadha thaNigai kaavalaa veera
karuNai mEruvE dhEvar perumaaLE.

Learn The Song



Know The Raga Thodi (8th mela)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Paraphrase

What is the nature of Sivam or the all-pervading Universal Consciousness? Sivam or Brahman is a supreme, universal spirit that is eternal and unchanging. Not only is it immanent (in-dwelling Antaryami) in the universe but it also transcends it. It is the sub-stratum of every conceivable matter in the universe. It is Maya that prevents us from perceiving the Ultimate Reality that constitutes us. The poet asks God to teach him the technique of merging Self with the Infinite.

உடலின் ஊடு போய் மீளும் உயிரின் ஊடு மாயாத உணர்வின் ஊடு வான் ஊடு முது தீ ஊடு (udalinUdu pOymeeLum uyirinUdu mAyAdha uNarvinUdu vAnUdu mudhu theeyUdu) : It permeates the body; It constitutes the life that gets in and out of the body; It is in the imperishable consciousness; It is in the Sky; It is in the fierce Fire; The Five Pancha Maha Bhutas - Earth, Fire, Water, Air and Ether or Space are the fundamental building blocks of the Universe and form the basis for all things found in the material creation.
(ஞானிகள் உணரக்கூடிய சிவரூபம் எங்கும் பரவி உள்ளது. அது) உடலுக்கு உள்ளும், உடலில் போய் மீளுகின்ற மூச்சுக்காற்றாகிய உயிரிலும், உயிரில் இருக்கும் அழியாத உணர்வாகிய சைதன்யமாகவும், ஐம்பூதங்களாகிய ஆகாயத்திலும், நெருப்பிலும், மாயாத உணர்வின் ஊடு = அழியாத உணர்ச்சியுள்;

உலவை ஊடு நீர் ஊடு புவியின் ஊடு (ulavai Udu neerUdu buviyinUdu) : It is in the Air, the Water and the Earth; உலவை = உலவிக்கொண்டிருக்கும் காற்று,

வாதாடும் ஒருவரோடு மேவாத தனி ஞான சுடரின் ஊடு (vAdhAdum oruvarOdu mEvAdha thani nyAnac sudarinUdu) : It is beyond the comprehension of religious fanatics arguing among themselves and it resides in the unique glow of Wisdom ; சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத ஒப்பற்ற ஞான ஒளியினுக்குள்ளும்,

நால் வேத முடியின் ஊடு ஊடாடு(ம்) ( nAl vEdha mudiyinUdu mUdAdu) : It pervades the crests of the four VEdAs (Scriptures);

துரிய ஆகுல அதீத சிவ ரூபம் (thuriya Akula atheetha siva rUpam ) : It is the Vision of SivA that is above the thuriya stage and beyond all miseries; துரிய நிலையில் இருப்பதும், துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய சிவ ரூபத்தை, ஆகுலம் (aakulam ) : worry; அதீத (atheetha ) : beyond; துரியம் என்பது பொறி புலன்கள் வேலை செய்யாத, உயிர் சக்தி மூலாதாரத்திலிருந்து எழுச்சி பெற்று ஆக்கினையில் நிலை பெற்றிருக்கும் ஒரு உணர்வு நிலை.

தொலைவு இலாத பேராசை துரிசு அறாத ஓர் பேதை ( tholaivilAdha pErAsai thurisaRAdha Or pEdhai) : I am a fool , incapable of severing my endless desires and blemishes; முடிவற்ற பேராசையும் குற்றமும் நீங்காத ஓர் மூடனாகிய அடியேன் துரிசு (thurisu ) : defect, fault; பேதை (pedhai) : a simpleton, an ignorant man;

தொடும் உபாயம் ஏதோ சொல் அருள்வாயே (thodum upAya mEdhO sol aruLvAyE ) : Can you teach me to behold that vision?

In the six lines beginning from "madal aRAdha" and ending in "malar vAvi", the poet describes a powerful vaalai (scabbard) fish in the lotus pond of Thiruththani. The incomparable exploits of Vaalai fish symbolises the valiant acts of Veerabahu, the younger brother and messenger of Lord Murugan who went to the island of Veera mahendrapuri of Surapadman and killed all the hostile demons on the way and returned to Thirutthani triumphantly.

திருத்தணியில் குளத்தில் வாழுகின்ற வாளை மீன் மதகு வழியே சென்று, தாமரைக் காட்டை அழித்து, மதகுகளை உடைத்தும், வரால் மீன்களை விரட்டியும், கடலில் சென்று பெரிய மகர மீன்களைத் தோல்வியுறச் செய்தும், ஆற்றின் வழியே மீண்டு முன்பிருந்த குளத்தில் வந்து சேருமாம். இத்துணை வலிமை வாளை மீனுக்கு உண்டு என்று குறிப்பிடுகின்றார். வீரவாகு தேவர் தூது சென்று வழியில் அரக்கர்களைக்கொன்று கடல் நடுவில் உள்ள வீரமகேந்திரஞ் சென்று, போர் புரிந்து வெற்றியுடன் மீண்டதையும் இது குறிப்பினால் புலப்படுத்துகின்றது.

மடல் அறாத வாரீச அடவி சாடி (madal aRAdha vAreesa adavi sAdi ) : They(the fish) swam into the forest of fully bloomed lotus flowers and destroyed the forest; இதழ்கள் நீங்காத தாமரைப் பூவின்காட்டை அழித்து, அடவி (atavi ) : forest; வாரீசம் (vareesam) : lotus;

மாறான வரி வரால் குவால் சாய அமராடி (mARAna varivarAl kuvAl sAya amarAdi) : It fought with and drove away the hostile stream of striped varAl fish; குவால் (kuvaal) : crowd; a group of fish is called a school of fish.

மதகு தாவி மீதோடி உழவரால் அடாது ஓடி (madhaku thAvi meedhOdi uzhavarAl adAdhOdi ) : It jumped over all barricades in water, escaping the attack by peasants working in the fields; செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாண்டி மேலே ஓடி, மடை அல்லது மதகு என்பது குளம், ஏரி அல்லது கண்மாய்களில் உள்ள நீரை விளைநிலங்களின் பாசனத்திற்கு திருப்பி விடுவதற்காக நிறுவப்பட்ட கதவு; அடுதல் = போராடுதல், கொல்லுதல்;

மடையை மோதி ஆறு ஊடு தடமாக (madaiyai mOdhi ARUdu thadamAga ) : It collided with the barriers on the way and swam along the current in the river; வழியில் உள்ள நீர்மடைகளைத் தாக்கி, ஆற்றின் வழியிலே சென்று,

கடல் புகா மகா மீனை முடுகி (kadal pugA mahA meenai mudugi ) : upon entering the sea, It confronted the large fish and chased them away;

வாளை தான் மேவு கமல வாவி மேல் வீழு (vALai thAn mEvu kamala vAvi mEl veezhu) : It is the unique VALai fish that returned triumphantly to its home, the lotus pond.

மலர் வாவி கடவுள் நீல(ம்) மாறாத தணிகை காவலா வீர ( malarvAvi kadavuL neela mARAdha thaNigai kAvalA veera) : That lotus pond, where a blue lily with divine fragrance blossoms daily without fail, is in ThiruththaNigai protected by You, Oh valorous One! இத்தகைய (வாளை மீன் வளரும்) மலர்ச்சுனையில், தெய்வமணமுள்ள நீலோற்பல மலர் மலர்வது என்றும் தவறாத திருத்தணிகைக்கு அரசே! வீர மூர்த்தியே! கடவுள் ( kadavuL) : divine fragrance; வாவி ( vaavi ) : pond;

கருணை மேருவே தேவர் பெருமாளே. (karuNai mEruvE dhEvar perumALE. ) : You are compassionate like the Mount MEru! You are the Lord of the Celestials, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே