98. கடாவினிடை வீரம்


ராகம்: மோகனம்தாளம்: திச்ர ரூபகம் (5)
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங்
கடாவினிக ராகுஞ்சமனாருங்
கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங்
கனாவில்விளை யாடுங் கதைபோலும்
இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங்
கிராமலுயிர் கோலிங் கிதமாகும்
இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின்
றியானுமுனை யோதும் படிபாராய்
விடாதுநட நாளும் பிடாரியுட னாடும்
வியாகரண ஈசன் பெருவாழ்வே
விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும்
விநாசமுற வேலங் கெறிவோனே
தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ்
சுவாசமது தானைம்புலனோடுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்
சுவாமிமலை வாழும் பெருமாளே.

kadaavin idai veerang kedaamal inidhERung
kadaavi nigaraagum samanaarung

kadaavi vidu dhoothan kedaadha vazhi pOlung
kanaavil viLaiyaadung kadhai pOlum

idaadhu pala thEdung kiraadhar poruL pOl in
giraamal uyir kOl ingidhmaagum

idhaamen iru pOdhum sadhaa in mozhiyaal in
driyaanum unai Odhum padi paaraay

vidaadhu nata naaLum pidaari udan aadum
viyaakaraNa eesan peru vaaazhvE

vikaaramuRu sooran pagaaram uyir vaazhvum
vinaasamuRa vEl angeRivOnE

thodaadhu nedu dhooran thadaadhu miga Odum
suvaasamadhu thaan aimpulan Odum

subaanamuRu nyaanan thapOdhanargaL sErum
suvaamimalai vaazhum perumaaLE.

Learn The Song



Know The Raga Mohanam (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S D2 P G3 R2 S

Paraphrase

Life and its pleasures are as transient as the dream and the wealth we accumulate. Therefore Saint Arunagirinathar seeks Lord's blessing so that he would always remember and sing His glory.
கடாவினிடை வீரங் கெடாமல் இனிது ஏறுங் கடாவின் நிகராகுஞ் சமனாரும் (kadaavin idai veeram kedaamal inidhERum kadaavi nigaraagum samanaarum) : Mounting the buffalo valiantly and joyously, Yama, shaggy as the buffalo,

கடாவிவிடு தூதன் கெடாதவழி போலும் ( kadAvi vidu dhUthan kedAdha vazhi pOlum) : commands his messenger who follows an unfailing path; similar to this infallible messenger of death, கடாவுதல் = செலுத்துதல்; கெடாத வழி = தவறாத வழி;

சதம் என்று நாம் நம்பும் வாழ்வு, கனாவைப் போலவும், அறஞ் செய்யார் பொருளைப் போலவும், அழியும் இயல்புடையது.

கனாவில் விளையாடுங் கதைபோலும் ( kanAvil viLaiyAdum kadhai pOlum) : like the evanescent story that unfurls in a dream (and is gone when one wakes up);

இடாது பல தேடும் கிராதர் பொருள் போல் ( idAdhu pala thEdum kirAdhar poruL pOl ) : and like the short-lived wealth of the misers who amass it without giving alms (to the needy), இடாது = யாருக்கும் கொடுக்காது; பல தேடும் = பலவற்றைத் தேடிச் சேர்த்துவைக்கும்;

இங்கு இராமல் உயிர் கோல் இங்கு இதமாகும் இதாம் என ingu irAmal uyir kOl ingu idhamAgum idhAmena ) : life in this world is very transient and temporary; yet I foolishly believe that this life is a lasting pleasure! உயிர்கோல் = உயிரைப் பறித்து / கவர்ந்து;

இரு போதும் சதா இன்மொழியால் இன்று யானும் உனை ஓதும்படி பாராய். ( iru pOdhum sadhA in mozhiyAl indru yAnum unai Odhum padi pArAy ) : bless me so that I pray to you and sing your glory day and night with sweet words.

விடாது நட நாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே ( vidAdhu nada nALum pidAri udan Adum viyAkaraNa eesan peru vAazhvE ) : You are the son of Lord Shiva who is an authority on the rules of the art of dancing and who dances non-stop everyday with Kali.

விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேல் அங்கு எறிவோனே ( vikAramuRu sUran pagAram uyir vAzhvum vinAsamuRa vEl angu eRivOnE) : You hurled the spear at the wicked Suran and destroyed his ego and life. மாறுபட்ட சூரபன்மனுடைய ஆடம்பரம் நிறைந்த வாழ்க்கை அழியுமாறு வேலை விடுவித்தவரே! விகாரம் = துர்குணம்; பகார = அலங்காரமான; பகரம் என்ற சொல் சந்தத்தை முன்னிட்டு பகாரம் எனவந்தது.

தொடாது நெடு தூரம் தடாது மிக ஓடும் சுவாசமதுதான் ஐம்புலனோடுஞ் ( thodAdhu nedu dhUram thadAdhu miga Odum suvAsamadhu thAn aimpulan Odum ) : The breath, which runs unhindered, long and deep, and unbounded; and the five sensory organs; தொடமுடியாத எல்லைக்கெல்லாம் நீண்ட தொலைவுக்குத் தடையில்லாமல் அளவு கடந்து ஓடுகின்ற மூச்சையும், ஐம்புலன்களையும்,

சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேரும் ( subAnamuRu nyAna thapOdhanargaL sErum ) : are controlled through Yogic exercises of breathing. The destination of these wise meditating yogis (pranayama), பருகுவதற்கு எளிதான பானமாக குடித்து ஞானத்தால் அவற்றை (மூச்சையும், ஐம்புலன்களையும்) உள்ளே அடக்கிய தவசீலர்கள் ஒன்றுகூடி இருப்பதான; சுபானம் உறு = நல்ல படி உள்ளே அடக்குகின்ற;

சுவாமிமலை வாழும் பெருமாளே.(suvAmimalai vAzhum perumALE.) : is SwAmimalai, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே