92. வேயிசைந்து


ராகம்: வராளிதாளம்: 1½ + 2
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செயஅவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிடவெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கியமதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திடஅருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன்மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய்திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரியிடமாகும்
ஆல முண்டர நாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய பெருமாளே.

Learn the Song


Paraphrase

வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையிலே முயங்கிட (vEy isainthezhu thOLgaL thangiya mAthar kongaiyilE muyangida ) : To lustily hug the bamboo-like shoulders shooting from the body and the bosoms of the concubines, மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட விலை மாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி , வேய் (vEy) : bamboo;

வீணிலும் சில பாதகம் செய அவமே தான் (veeNilum sila pAthakam seya avamE thAn) : I committed many sins in vain.

வீறு கொண்டு உடனே வருந்தியுமே (veeRu koNdu udanE varunthiyumE) : I would be exuberant one instant but repent my acts in the next instant

உலைந்து அவமே திரிந்து உள்ளம் கவன்று (ulainthu avamE thirindu uLamE kavanRu) : being thus confused, I roamed about aimlessly and became mentally tormented.

அறிவு கலங்கிட வெகு தூரம் போய் அலைந்து உழலாகி நொந்து (aRivE kalangida vegu thUram pOy alainthu uzhalAgi nonthu ) : My thinking became deranged, and I strayed too far and felt miserable.

பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே (pin vAdi nainthu enathu Avi vembiye) : Then my physical health withered, and the life in my degenerated body was near extinction.

பூதலம் தனிலே மயங்கிய மதி போக (bUthalam thanilE mayangiya mathi pOga ) : In order that my lust-filled mind takes leave of me on this earth,

போது கங்கையின் நீர் சொரிந்து (pOthu gangaiyin neer sorinthu) : I must offer flowers along with holy water from River Ganga

இரு பாத பங்கயமே வணங்கியே பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே (iru pAtha pangayamE vaNangiye pUsaiyum silavE purinthida aruLvAyE ) : at Your two hallowed lotus feet in complete surrender and perform many PUjas (Offerings) to You with Your Blessings!

தீ இசைந்து எழவே இலங்கையில் ராவணன் சிரமே அரிந்து அவர் சேனையும் செல மாள வென்றவன் மருகோனே (thee isainthu ezhavE ilangaiyil rAvaNan siramE arinthavar sEnaiyun cela mALa venRavan marugOnE ) : LankA was engulfed by fire, Ravana's heads were all severed, and his entire armies were annihilated by Rama (Lord Vishnu); You are His nephew!

தேசம் எங்கணுமே புரந்திடு சூர் மடிந்திட வேலின் வென்றவ (thEsam engaNumE puranthidu sUr madinthida vElin venRava ) : Demon SUran who ruled the entire world was destroyed when You wielded the Spear!

தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே (thEvar tham pathi yALa anbu seythiduvOnE ) : Your compassion made it possible for the DEvAs to redeem and rule their celestial land!

ஆயி சுந்தரி நீலி பிங்கலை ( Ayi sunthari neeli pingalai ) : She is the Mother of all; She is beautiful; She has a green and golden complexion;

போக அந்தரி சூலி குண்டலி ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும் ( bOga anthari sUli kuNdali Athi ampigai vEtha thanthiri idamAgum) : She is the Effulgence that gives bliss to all lives; She holds the Trident in Her hand; She is in the form of Energy and Pure delusion; She is the primordial Goddess; She presides over all the VEdAs; She is PArvathi who occupies the left side of

ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச (Alam uNda aranAr iRainja) : Lord SivA, the one who imbibed the poison that emerged from the milky ocean. Upon His entreaty,

ஓர் போதகம் தனையே உகந்து அருள் (Or bOthagam thanaiyE uganthu aruL) : You happily preached to Him the unique PraNava ManthrA, Oh Lord!

ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.(Avinankudi meethu ilangiya perumALE.) : You have Your abode at Pazhani (ThiruAvinankudi), Oh Great One! திருஆவினன்குடி — திரு ஆ இனன் குடி - இலக்குமி, பசு, சூரியன் இவர்கள் முருகனை பூசித்த தலம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே