91. வாதம் பித்தம்


ராகம்: ஹம்சாநந்திதாளம்: ஆதி (2 களை)
வாதம் பித்தமி டாவயி றீளைகள்
சீதம் பற்சனி சூலைம கோதர
மாசங் கட்பெரு மூலவி யாதிகள்குளிர்காசம்
மாறுங் கக்கலொ டேசில நோய்பிணி
யோடுந் தத்துவ காரர்தொ ணூறறு
வாருஞ் சுற்றினில் வாழ்சதி காரர்கள்வெகுமோகர்
சூழ்துன் சித்ரக பாயைமு வாசைகொ
டேதுஞ் சற்றுண ராமலெ மாயைசெய்
சோரம் பொய்க்குடி லேசுக மாமெனஇதின்மேவித்
தூசின் பொற்சர மோடுகு லாயுல
கேழும் பிற்பட வோடிடு மூடனை
தூவஞ் சுத்தடி யாரடி சேரநினருள்தாராய்
தீதந் தித்திமி தீதக தோதிமி
டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு
சேசெஞ் செக்கெண தோதக தீகுடவெனபேரி
சேடன் சொக்கிட வேலைக டாகமெ
லாமஞ் சுற்றிட வேயசு ரார்க்கிரி
தீவும் பொட்டெழ வேயனல் வேல்விடுமயில்வீரா
வேதன் பொற்சிர மீதுக டாவிந
லீசன் சற்குரு வாயவர் காதினில்
மேவும் பற்றிலர் பேறரு ளோதியமுருகோனே
வேஷங் கட்டிபி னேகிம காவளி
மாலின் பித்துற வாகிவ்வி ணோர்பணி
வீரங் கொட்பழ னாபுரி மேவியபெருமாளே.

vAtham piththami dAvayi ReeLaikaL
seetham paRcani cUlaima kOthara
mAsang katperu mUlavi yAthikaL kuLirkAsam
mARung kakkalo dEsila nOypiNi
yOdun thaththuva kArArtho NURaRu
vArunj cuRRinil vAzhsathi kArarkaL vekumOkar
sUzhthun sithraka pAyaimu vAsaiko
dEthunj caRRuNa rAmale mAyaisey
sOram poykkudi lEsuka mAmena ithinmEvith
thUsin poRcara mOduku lAyula
kEzhum piRpada vOdidu mUdanai
thUvanj suththadi yAradi sErani naruLthArAy
theethan thiththimi theethaka thOthimi
dUduN duddudu dUdudu dUdudu
cEcenj cekkeNa thOthaka theekuda venapEri
cEdan cokkida vElaika dAkame
lAmanj cuRRida vEyasu rArkiri
theevum pottezha vEyanal vElvidu mayilveerA
vEthan poRcira meethuka dAvina
leesan saRkuru vAyavar kAthinil
mEvum paRRilar pERaru LOthiya murukOnE
vEshang kattipi nEkima kAvaLi
mAlin piththuRa vAkivi NOrpaNi
veerang kotpazha nApuri mEviya perumALE.

Learn the song



Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 D2 N3 S    Avarohanam: S N3 D2 M2 G3 R1 S

Paraphrase

வாதம் பித்தம் மிடா வயிறு ஈளைகள் (vAtham piththa midA vayiRu eeLaikaL) : Rheumatism, biliousness, protruding tummy, lung diseases, மிடா = பெரிய மண்பானை;

சீதம் பல் ச(ன்)னி சூலை மகோதரம் (seetham pal channi sUlai magOtharam) : dysentry, epilepsy caused by many ailments, colicky stomach pain, edema of the stomach,

அங்கண் மாசு பெரு மூல வியாதிகள் குளிர் காசம் (am kaN mAsu peru mUla viyAthigaL kuLir kAsam) : eye diseases, major piles, fever and chillness, tubercolosis, மாசு அம் கண் = அழகிய கண்ணில் மாசுபடும் கண்ணோய்,

மாறும் கக்கலோடே சில நோய் பிணியோடு (mARum kakkalodE sila nOy piNiyOdum) : continuous vomiting, etc. - these are some of the ailments and diseases afflicting me.

தத்துவகாரர் தொண்ணூறு அறுவாரும் சுற்றினில் வாழ் (thaththuva kArar thoNURu aRuvArum suRRinil vAzh) : The five sensory organs, living amidst a crowd of 96 tattvas

சதி காரர்கள் வெகு மோகர் சூழ் (sathi kArarkaL vegu mOgar sUzh ) : are the worst conspirators and extremely greedy,

துன் சித்ர கபாயை மூ ஆசை கொண்டு (thun sithra kabAyai moo Asai koNdu) : with an evil and strange attachment to the body, along with the threesome desire for earth, gold and women; கொடிய விசித்திரமான தேகத்தின் மீதுள்ள ஆசையால் மண் பெண் பொன் என்ற மூவாசைகளைக் கொண்டு; சித்ர = விசித்திரமான; கபாய் = கவசம், உயிருக்கு கவசமாகிய உடம்பு;

ஏதும் சற்று உணராமலே மாயை செய் (Ethum chaRRu uNarAmale mAyai sey) : I lacked the perceptiveness to discern good things; instead, completely deluded by maya, பக்தி, ஞானம், ஜபம், தியானம் முதலிய நலங்களில் ஒன்றையும் சிறிதேனும் உணராமல் மாயையைச் செய்கின்ற

சோரம் பொய் குடிலே சுகமாம் என இதில் மேவி (sOram poy kudilE sugamAm ena ithin mEvi) : I indulged in this hut-like body, full of stealth and falsehood, thinking that it would be a lasting pleasure. கள்ளமும் பொய்யும் நிறைந்த இந்த உடம்பே சுகம் எனக் கருதி இந்த உடலை விரும்பி,

தூசின் பொன் சரமோடு குலாவு (thUsin pon charamOdu kulAvu) : I happily adorned my body with nice clothes and golden ornaments; தூசு (thoosu) : Cloth, garment, வஸ்திரம்;

உலகு ஏழும் பிற்பட ஓடிடும் மூடனை (ulagEzhum piRpada Odidum mUdanai ) : I thought that I was running ahead of the seven worlds that were trailing behind me; I was a stupid fool.

தூ அம் சுத்த அடியார் அடி சேர நின் அருள் தாராய் (thU am suththa adiyAr adi sEra nin aruL thArAy ) : Kindly bless me with Your grace to worship the feet of Your unstained and pure devotees. தூ அம் = தூய்மை வாய்ந்த அழகிய;

தீதந் தித்திமி தீதக தோதிமி டூடுண் டுட்டுடு டூடுடு டூடுடு சேசெஞ் செக்கெண தோதக தீகுட வெனபேரி (theethan thiththimi theethaka thOthimi dUduN duddudu dUdudu dUdudu sEsenj sekkeNa thOthaka theekuda ena pEri) : The drums were beating to the meter of "theethan thiththimi theethaka thOthimi dUduN duddudu dUdudu dUdudu cEcenj cekkeNa thOthaka theekuda sEsenj sekkeNa thOthaka theekuda"

சேடன் சொக்கிட வேலை கடாகம் எ(ல்)லாம் அஞ்சு உற்றிடவே (sEdan sokkida vElai kadAgam elAm anju uRRidavE ) : AdhisEshan (the Giant Serpent) swooned, the seas and the planets in the sky were terrified; கடாகம் = அண்டகோளகை;

அசுரார் கிரி தீவும் பொட்டு எழவே அனல் வேல் விடு மயில் வீரா (asurAr giri theevum pottu ezhavE anal vElvidu mayilveerA ) : the mountains thronged by the demons and their island were smashed into pieces; when You hurled the burning Spear, Oh valorous One, mounting the Peacock!

வேதன் பொன் சிரம் மீது கடாவி (vEthan poRcira meethukadAvi ) : You knocked the eminent heads of BrahmA with Your knuckles! பிரமதேவனுடைய அழகிய தலையில் குட்டி,

நல் ஈசன் சற் குருவாய் அவர் காதினில் (nal eesan saRkuruvAy avar kAthinil ) : You became the Esteemed Master of the good Lord SivA, and into His ears,

மேவும் பற்று அலர் பேறு அருள் ஓதிய முருகோனே (mEvum paRRu alar pER uaruL Othiya murugOnE ) : You preached the PraNava ManthrA, ordained graciously for those who have renounced everything. உண்மையை நாடும் ஒன்றிலும் பற்று இல்லாதவர் பெறும் அருளாகிய பிரணவத்தை உபதேசித்த முருகப் பெருமானே! மேவுதல் = விரும்புதல்; பற்றிலர் பேறருள் = பற்றற்ற பரமஞானிகள் பெறுகின்ற பொருள் பிரணவப் பொருள்.

வேஷம் கட்டி பின் ஏகி மகா வ(ள்)ளி (vEsham katti pin Eki magA va(L)Li ) : You went to the millet-field in various disguises (the hunter, the neem tree and the old man) for wooing VaLLi, the great damsel, வேஷம் கட்டி = வேடக் கோலமும், வளையல்காரச் செட்டி வடிவும், வேங்கை மர வேடமும், கிழ முனிவர் வேடமும் கொண்டு,

மாலின் பித்து உறவாகி (mAlin piththuRavAgi) : and became intoxicated with love for her.

வி(ண்)ணோர் பணி வீரம் கொட்ட பழனா புரி மேவிய பெருமாளே.( viNOrpaNi veeram kotta pazhanA puri mEviya perumALE.) :The Celestials worship Pazhani, famous for its valour; and that place is Your abode, Oh Great One! விண்(viN ) : sky; வி(ண்)ணோர் பணி (viNOr paNi) : bowed by the celestials;

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே