89. வசனமிக வேற்றி


ராகம்: ரஞ்சனிதாளம்: அங்க தாளம்
(1½ + 1 + 1½ + 3)
வசனமிக வேற்றிமறவாதே
மனதுதுய ராற்றிலுழலாதே
இசைபயில்ஷ டாக்ஷரமதாலே
இகபரசெள பாக்யமருள்வாயே
பசுபதிசி வாக்யமுணர்வோனே
பழநிமலை வீற்றருளும்வேலா
அசுரர்கிளை வாட்டிமிகவாழ
அமரர் சிறை மீட்ட பெருமாளே

vachanamiga vEtri maRavaadhE
manadhu thuyar aatril uzhlaadhE
isaipayil shadaaksha ram adhaalE
igaparasau baagyam aruLvaayE
pasupathisi vaakyam uNarvOnE
pazhanimalai veetra ruLum vElaa
asurarkiLai vaatti migavaazha
amararsiRai meetta perumaaLE.


Learn the Song



Raga Ranjani (Janyam of 59th mela Dharmavati)

Arohanam: S R2 G2 M2 D2 S    Avarohanam: S N3 D2 M2 G2 S R2 G2 S

Paraphrase

வசனம் மிக ஏற்றி மறவாதே (vachana miga Etri maRavAdhE ) : வசனம் மிக ஏற்றி (vachana miga Etri – vachanam can refer to both worldly talks as well as to Lord's name/mantra. By repeatedly chanting (Your name) and constantly remembering You, or
Without forgetting You through incessant worldly talks,
உரு ஏற மிகவும் ஜபம் செய்து உன்னை மறவாமல் இருந்து, அல்லது
உலகப் பேச்சுக்களை மிகவும் பேசி, தேவரீரை மறந்து விடாமல் இருந்து
,

மனது துயர் ஆற்றில் உழலாதே (manadhu thuyar Atril uzhlAdhE) : and reining my mind from wading through in the river of sorrow, என் மனம் துயரம் தரும் வழிகளில் அலைந்து திரியாமல் இருந்து

இசை பயில் ஷடாக்ஷரம் அதாலே (isai payil shadAksharam adhAlE) : I am systematically meditating on Your six letters (sa-ra-va-Na-bha-va) so, மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ) தரும் பயனாலே; இசைபயில் என்றால் விதிப்படி உச்சரிக்கும் அல்லது இனிய ஓசையுடன் கூடிய சடக்கர மந்திரம். புகழ்வாய்ந்த/ ப்ரசித்தமான என்றும் கருதலாம்.

இகபர செளபாக்யம் அருள்வாயே (iga para saubAgyam aruLvAyE) : Grant me happiness in this birth and after death.

பசு பதி சிவாக்யம் உணர்வோனே (pasupathi sivAkyam uNarvOnE) : You realize the meaning of all SivAgamAs (protocols to be followed to attain Siva); "சி" என்ற சிவபெருமானுடைய திருமந்திரமாகிய ஏகாட்சரத்தின் பொருள் இத்தன்மையது என்று உணர்பவரே; பசு பதி = உடல் பற்று/ உலகப்பற்றுக்களால் கண்டுண்ட இவ்வுயிர்களுடைய கட்டுக்களை அறுக்கவல்ல தலைவனான சிவபெருமான்; சிவாக்யம் உணர்வோனே = சி" என்ற பதி அட்சரத்தின் தத்துவங்களை எல்லாம் தெரிந்து கொண்டிருப்பவரே! சிவ பெருமானிடம் சென்று சேர்க்கும் நூல்களை (சைவ ஆகமங்களை) நன்கு அறிந்தவனே (உபதேசம் புரிய வல்லவனே. ஆ + கமம் = ஆகமம்; ஆ - பசு; கமம் - கட்டுப்படுத்துவது; பசுவானது தொழுவத்தில் கட்டப்பட்டிருப்பது போல் உயிரானது உடலோடு கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய உயிரை கட்டுப்படுத்தி பரம்பொருளை உணரச் செய்வதே ஆகமம் என்ப்படும். மாணிக்கவாசகர் “ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க” கூறுவது போல் இறைவனே ஆகமத்தை படைத்தார் என்று அறியலாம். மனித வாழ்க்கைக்கு உகந்தது, தீமையை பயிற்றுவிப்பது, முக்தி அடைய வழி வகுப்பது போன்றவற்றை கற்றுக் கொடுப்பதே ஆகமம். )

பழநி மலை வீற்று அருளும் வேலா (pazhani malai veetRu aruLum vElA) : You chose Mount Pazhani as Your abode, Oh God with the Spear (VElA)!

அசுரர் கிளை வாட்டி (asurar kiLai vAtti) : You destroyed the clan of all Demons (AsurAs)

மிக வாழ அமரர் சிறை மீட்ட பெருமாளே (miga vAzha amarar siRai meetta perumALE.) : and enabled the DEvAs to prosper by liberating them from prison, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே