Posts

Showing posts from April, 2013

53. வரியார்

ராகம் : காம்போதி/சஹானா தாளம் : சதுச்ர ஜம்பை வரியார் கருங்கண் மடமாதர் மகவா சைதொந்த மதுவாகி இருபோ துநைந்து மெலியாதே இருதா ளினன்பு தருவாயே பரிபா லனஞ்செய் தருள்வோனே பரமே சுரன்ற னருள்பாலா அரிகே சவன்றன் மருகோனே அலைவா யமர்ந்த பெருமாளே.

52. வந்து வந்து முன்

ராகம்: சிந்து பைரவி தாளம்: திஶ்ர நடை (12) வந்து வந்து முன்த வழ்ந்து வெஞ்சு கந்த யங்க நின்று மொஞ்சி மொஞ்சி யென்ற ழுங்கு ழந்தையோடு மண்ட லங்கு லுங்க அண்டர் விண்ட லம்பி ளந்தெ ழுந்த செம்பொன் மண்ட பங்க ளும்ப யின்றவீடு கொந்த ளைந்த குந்த ளந்த ழைந்து குங்கு மந்த யங்கு கொங்கை வஞ்சு தஞ்ச மென்று மங்குகாலம் கொங்க டம்பு கொங்கு பொங்கு பைங்க டம்பு தண்டை கொஞ்ச செஞ்ச தங்கை தங்கு பங்க யங்கள்தாராய்

51. வஞ்சத்துடனொரு

ராகம் : மனோலயம் தாளம் : ஆதி (2 களை) வஞ்சத் துடனொரு நெஞ்சிற் பலநினை வஞ்சிக் கொடியிடை மடவாரும் வந்திப் புதல்வரும் அந்திக் கிளைஞரு மண்டிக் கதறிடு வகைகூர அஞ்சக் கலைபடு பஞ்சிப் புழுவுடல் அங்கிக் கிரையென வுடன்மேவ அண்டிப் பயமுற வென்றிச் சமன்வரும் அன்றைக் கடியிணை தரவேணும்

50. வஞ்சங்கொண்டு

ராகம் : பூர்வி கல்யாணி தாளம் : திச்ர த்ரிபுடை (7) வஞ்சங்கொண் டுந்திட ராவண னும்பந்தென் திண்பரி தேர்கரி மஞ்சின்பண் புஞ்சரி யாமென வெகுசேனை வந்தம்பும் பொங்கிய தாகஎ திர்ந்துந்தன் சம்பிர தாயமும் வம்புந்தும் பும்பல பேசியு மெதிரேகை மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு ரங்குந்துஞ் சுங்கனல் போலவே குண்டுங்குன் றுங்கர டார்மர மதும்வீசி மிண்டுந்துங் கங்களி னாலெத கர்ந்தங்கங் கங்கர மார்பொடு மின்சந்துஞ் சிந்தநி சாசரர் வகைசேர வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க ளுந்துந்துந் தென்றிட வேதசை நிணமூளை உண்டுங்கண் டுஞ்சில கூளிகள் டிண்டிண்டென் றுங்குதி போடவு யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன் மருகோனே