82. பஞ்ச பாதகன்


ராகம்: ஹுசேநிஅங்க தாளம் (8)
1½ + 2 + 1½ + 1 + 1½ + 1
பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு
வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி
பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழைபவுஷாசை
பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ
பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை
பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகுசதிகாரர்
அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர்
தங்கள் வாணிபங் காரியம லாமலரு
ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுகழடியேனை
அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி
சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி
கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள்புரிவாயே
வஞ்ச மாசுரன் சேனைகட லோடுகுவ
டுங்க வேயினன் போலவொளிர் வேலைவிடு
வண்கை யாகடம் பேடுதொடை யாடுமுடிமுருகோனே
மங்கை மோகசிங் காரரகு ராமரிட
தங்கை சூலியங் காளியெமை யீணபுகழ்
மங்க ளாயிசந் தானசிவ காமியுமையருள்பாலா
கொஞ்ச மாசுகம் பொலமொழி நீலகடை
பெண்கள் நாயகந் தோகைமயிற் போலிரச
கொங்கை மால்குறம் பாவையவல் தீரவரஅணைவோனே
கொண்டல் சூழுமஞ் சோலைமலர் வாவிகயல்
கந்து பாயநின் றாடுதுவர் பாகையுதிர்
கந்தி யோடகஞ் சேர்பழனி வாழ்குமரபெருமாளே.

Learn the Song




pancha paathagan paavi muzhu moodan vegu
vancha lObiyan soodhu kolaikaaran madhi
paN koLaadhavan paava kadaloodu nuzhai bavushaasai
pangan mOdhiyam paazh naragil veeNin vizha
peNdir veedu pon thEdi nodi meedhil maRai
pancha maamalam paasamodu koodi vegu sadhikaarar
anju bootha muNdaa kadiya kaarar ivar
thangaL vaaNipang kaariyam alaamal aruL
anbar paaludan koodi aRiyaadha pugazh adiyEnai
aNdar maal ayan thEdi aRiyaadha oLi
chandhra sEkaran paavai viLaiyaadu padi
kandha naadudan koodi viLaiyaada aruL purivaayE
vanja maasuran sEnai kadalOdu kuva
dung kavE inan pOla oLir vElai vidu
vaNkaiyaa kadambEdu thodai aadumudi murugOnE
mangai mOga singaara raguraamarida
thangai sooliyan kaaLi emai eeNa pugazh
mangaLaayi santhaana sivakaami umai aruL baalaa
konju maasukam pOla mozhi neela kadai
peNgaL naayakan thOgai mayil pOl irasa
kongai maal kuRam paavai aval theeravara aNaivOnE
koNdal soozhuman sOlaimalar vaavi kayal
kandhu paaya nindraadu thuvar paagai udhir
kandhi yOdagan sEr pazhani vaazh kumara perumaaLE.

Paraphrase

பஞ்ச பாதகன் பாவி முழு மூடன் ( panja pAthakan pAvi muzhu mUdan ) : I have committed the five gravest offences (murder, lying, stealing, drunkenness and abuse of the teacher); I am a sinner; I am a total fool;

வெகு வஞ்ச லோபியன் சூது கொலைகாரன் மதி பண் கொளாதவன் (vegu vanja lObhiyan soothu kolaikAran mathi paN koLAthavan pAva kadalUdu nuzhai pavushAsai pangan) : I am the most devious and the worst miser; I am a gambler and murderer; My mind never adopts good ethics; பண் = பண்பு; மதி பண் கொளாதவன் = அறிவில் பண்பையே கொள்ளாதவன்;

பாவ கடல் ஊடு நுழை பவுஷ ஆசை பங்கன் ( pAva kadalUdu nuzhai pavushAsai pangan) : I am guilty of arrogance and lust which drown me in the sea of sins; பாவக்கடலில் நுழைகின்ற செருக்கு, ஆசை என்ற குற்றம் உடையவன் ஆன நான், பண் = பண்பு;

மோதி அம் பாழ் நரகில் வீணின் விழ ( mOthi am pAzh naragil veeNin vizha ) : Attacked thus, I throw myself into the bottomless pit of hell,

பெண்டிர் வீடு பொன் தேடி ( peNdir veedu pon thEdi ) : driven by my quest for women, properties and gold;

நொடி மீதில் மறை பஞ்ச மா மலம் பாசமொடு கூடி ( nodi meethil maRai panja mAmalam pAsamodu kUdi ) : I mingle with the five great slags (arrogance, karma, delusion, deception and concealment) that lie concealed in an instant, and suffer due to attachment;

வெகு சதிகாரர் அஞ்சு பூதம் உண்ட அ கடிய காரர் இவர் தங்கள் வாணிபம் காரியம் அ(ல்)லாமல் அருள் அன்பர் பாலுடன் கூடி அறியாத புகழ் அடியேனை (vegu sathikArar anju bUtham uNdA kadiya kArar ivar thangaL vANibham kAriyam alAmal aruL anbar pAludan kUdi aRiyAtha pugazh adiyEnai) : and the five elements, which constitutes my body and mind and are known for their sly deceit, play havoc on me; Rather than falling victim to their commercial and materialistic actions, I should have joined the company of Your blessed devotees; but I am notorious for not keeping the company of such good people. மிக்க மோசக்காரராம் ஐந்து பூதங்களாகிய அந்தத் தீயவர்களின் வியாபார காரியங்களில் கலவாமல், அருள் பெற்ற அன்பர்களிடத்தே கூடியறியாத புகழையே கொண்டுள்ள நான்,

அண்டர் மால் அயன் தேடி அறியாத ஒளி சந்த்ர சேகரன் பாவை விளையாடு படிக அந்த நாடுடன் கூடி விளையாட அருள் புரிவாயே (aNdar mAl ayan thEdi aRiyAtha voLi chanthra sEkaran pAvai viLaiyAdu padika antha nAdudan kUdi viLaiyAda aruL purivAyE ) : Please bless may so that I can revel in the Land of SivA, that is pure as the crystal, by joining the delightful sport that Lord Shiva — who who wears the crescent moon on His tresses and is beyond the comprehension or reach of the devas, Vishnu and BrahmA — plays with the Supreme Mother, PArvathi, தேவர்களும், திருமாலும், பிரமனும் தேடியும் காணாத ஜோதியான சந்திரசேகரனாம் சிவபிரானும், பாவையாம் தேவி பார்வதியும் கூடி விளையாடுகின்ற ஸ்படிகம் போன்று தூய அழகுடன் உள்ள நாடாகிய சிவலோகத்தில் உள்ளவர்களோடு கூடி விளையாட அருள் புரிவாயாக. படிக (padiga) : sphatika;

வஞ்ச மா சூரன் சேனை கடலோடு குவடும் கவே இனன் போல ஒளிர் வேலை விடு வண் கையா ( vanja mA suran sEnai kadalOdu kuvadum gavE inan pOla oLir vElai vidu vaN kaiyA ) : The treacherous demon, SUran, his armies, the seas and the Mount Krouncha were all destroyed when You wielded the spear, dazzling like the sun, from Your benevolent hand! வஞ்சம் நிறைந்த கொடும் சூரனும், அவனது படையும், கடலும், கிரெளஞ்சமலையும் ஒடுங்கும்படியாக, சூரியனைப் போல ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய, வழங்கும் தன்மையுடைய கையனே! குவடு (kuvadu) : mountain; கவே(kavE) : கவிழ்ந்து அழியுமாறு, இனன் (inan) : sun;

கடம்பு ஏடு தொடை ஆடு முடி முருகோனே ( kadambu Edu thodai Adu mudi murugOnE) : On Your tresses You wear the garland of kadappa flowers, Oh Muruga! கடப்பமலர் மாலை விளங்கும் திருமுடியை உடைய முருகனே

மங்கை மோக சிங்கார ரகு ராமர் இட தங்கை சூலி அங் காளி எமை ஈண புகழ் மங்கள ஆயி சந்தான சிவகாமி உமை அருள் பாலா (mangai mOga singAra ragu rAmar ida thangai chUli am kALi yemai yeeNa pugazh mangaLa Ayi santhAna sivagAmi umai aruL bAlA ) : She is the eternal damsel; She is the younger sister of the enchanting and handsome Raghuraman (Vishnu); She holds the trident in Her hand; She is the beautiful KALi; She, the most famous and auspicious Mother, delivered all of us; She is SivagAmi who grants all our boons like the SanthAna Tree (wish-yielding tree); You are the son of that UmAdEvi!

கொஞ்சு மா சுகம் போல மொழி நீல கடை பெண்கள் நாயகம் தோகை மயில் போல் இரச கொங்கை மால் குறம் பாவை ஆவல் தீர வர அணைவோனே (konju mA sugam pOla mozhi neela kadai peNgaL nAyagan thOgai mayil pOl irasa kongai mAl kuRam pAvai Aval theera vara aNaivOnE ) : She speaks sweetly like a parrot; her eyes are blue; she is the leader of the girls; her beauty is like that of the peacock; She has large bosom; She is the damsel of the KuRavAs; and You hugged that VaLLi so tightly that her desire was fulfilled! கொஞ்சுகின்ற அழகிய கிளி போன்ற மொழியும், நீல மணி போன்ற கடைக்கண்ணும், பெண்குலத்திற்கே தலைமையும், தோகையுடைய மயில் போன்ற சாயலும், இன்பத்தைத் தருகின்ற தனங்களும், பெருமையும் உடைய குறமகளாம் வள்ளிபிராட்டியின் ஆவல் தீருமாறு அரவணைத்துத் தழுவுபவரே; நீல கடை = நீல மணி போன்ற கடைக்கண், சுகம் (sukam ) : parrot; இரச கொங்கை (irasa kongai ) : pleasure-yielding bosom;

கொண்டல் சூழு(ம்)அம் சோலை மலர் வாவி கயல் கந்து பாய நின்று ஆடு துவர் பாகை உதிர் கந்தியோடு அகம் சேர் பழநி வாழ் குமர பெருமாளே. (koNdal chUzhum am sOlai malar vAvi kayal kanthu pAya ninRu Adu thuvar pAgai uthir kanthiyOdu akam cEr pazhani vAzh kumara perumALE.) : At Pazhani, Your abode, clouds settle on the tall trees in the grove; the ponds are full of flowers; the kayal fish leap so high with the swiftness of a horse that they shake the betel nut trees from which the bitter-sweet nuts drop down; Oh KumarA, the Great One! கொண்டல் (kondal) : cloud; வாவி (vAvi ) : pond; கயல் (kayal) : kayal fish; கந்து (kandhu) : horse; கயல் கந்து பாய = கயல் மீன் குதிரை போல வேகத்துடன் துள்ள

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே