74. சுருதிமுடி மோனம்

ராகம்: நாட்டை குறிஞ்சிதாளம்: சதுச்ர த்ருவம் கண்ட நடை
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ ரூபமுதலொருவாழ்வே
துரியநிலை யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடையஉணராதே
கருவிலுரு வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல்வினைதானே
கலகமிட வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யானஉனதருள்தாராய்
ஒருநியம மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅமருளவோனே
உததரிச மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவருகுருநாதா
பருதிகதி ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொருதிறலோனே
பணியுமடி யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவண பவாவென்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர்பெருமாளே.

surudhimudi mOnansol siRparama nyaana siva
samaya vadivaay vandha adhvaithamaana para
sudar oLiyadhaay nindra nishkaLa soroopa mudhal oru vaazhvE

thuriya nilaiyE kaNda muththar idhayaa kamalam
adhanil viLaiyaa nindra aRbutha subOdha suka
suya padika maa inba padhma padhamE adaiya uNaraadhE

karuviluruvE thangu sukkila nidhaana vaLi
poruma adhilE koNda mukguNa vibaaga nilai
karudha ariyaa vanjaka kapata moodi udal vinaithaanE

kalagamidavE pongu kuppai mala vaazhvu nijam
enauzhalu maayan jeniththa guhaiyE uRudhi
karudha suzhamaam indha mattai thanai aaLa una dharuLthaaraay

oru niyamamE viNda shatsamaya vEdha adi
mudi nadavumaay aNda muttai veLiyaagi uyir
udal uNarvadhaay engum uRpanamadhaaga amar uLavOnE

udhadharisamaam inba puththamirtha bOga sukam
udhavum amalaanandha saththikara mEvuNara
urupiraNavaa manthra karthavyam aaga varu gurunaathaa

parudhi kadhirE konju naRcharaNa noopurama
dhasaiya niRai pEraNda mokka nadamaadu gana
padha keruvidhaa thunga vetri mayil Erum oru thiRalOnE

paNiyum adiyaar chindhai mey poruLadhaaga navil
saravaNa bavaa ondru vaRkaramumaagi vaLar
paazhani malai mEnindra subramaNiyaa amarar perumaaLE.

Learn the Song



Raga Nattai Kurinji (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 G3 M1 N2 D2 N2 P D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 G3 M1 P G3 R2 S


Paraphrase

Murugan's 'vel' is His form as 'Wisdom' or 'jnana' (ஞானம்). Moreover, Murugan personifies the PraNava ManthrA, which represents His form and essence. வுரு (அ உரு) பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குரு நாதா . And Pazhani malai is the manifestation of Sadakshara mantra. சரவணபவா ஒன்று வல் கரமும் ஆகி வளர் பழநி மலை.

சுருதி முடி மோனம் சொல் சித் பரம (surudhi mudi mOnam sol siRparama) : You are the omniscient who resides at the crown of the vedas and preach tranquil silence; வேதங்களின் முடிவில் விளங்கும் மெளன நிலையை உபதேசித்து அருளும் முற்றறிவுடைய பெரிய பொருளே; சுருதி முடி (surudhi mudi) : the crown of the vedas;

ஞான சிவ சமய வடிவாய் வந்த அத்துவிதமான பர (nyAnasiva samaya vadivAy vandha adhvaithamAna para ) : You are the manifestation of wisdom with the form of Saivite body and are the Supreme non-dualistic god. அறிவுடன் கூடிய சைவ சமயத் திருமேனி தாங்கி எழுந்தருளி வந்த, இரண்டறக் கலந்திருக்கின்ற பரம் பொருளே! பரம் என்பது மிக உயர்ந்த பண்புகளுடன் கூடியது. பரன் எல்லாவற்றிலும் மேலான கடவுள்.

சுடர் ஒளியதாய் நின்ற நிட்கள சொரூப முதல் ஒரு வாழ்வே (sudar oLiyadhAy nindra nishkaLa sorUpa mudhal oru vAzhvE) : You appear as an effulgent light, formless and an embodiment of grace; You are primordial and a manifestation of the incomparable Total Shiva Bliss; ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவம் இல்லாதவனே, அருள் வடிவம் உடையவனே, ; நிட்கள (nitkaLa) : formless; முதல் = முதற் பொருளே; ஒரு வாழ்வே = ஒப்பற்ற சிவானந்தப் பெரு வாழ்வே;

துரிய நிலையே கண்ட முத்தர் இதய கமலம் (thuriya nilaiyE kaNda muththar idhayA kamalam) : From the lotus-heart of the liberated souls who have attained Self-Realisation (turiya) and the Ultimate Truth, துரிய நிலையில் தன் மயமாய் நிற்கும் உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன் முக்தர்களுடைய இதயத் தாமரையில், துரிய நிலை (thuriya nilai) : நான்காம் நிலை. விழித்திருக்கும் நிலை, உறங்கும் நிலை, கனவு காணும் நிலை — இவை மூன்றையும் கடந்து தன்மயமாய் நிற்கும் யோக நிலை. ;

அதனில் விளையா நின்ற அற்புத சுபோத சுக (adhanil viLaiyA nindra aRputha subOdha suga) : springs Your awe-inspiring, highest-knowledge-yielding, bliss-conferring, விளைகின்றதும், ஆச்சரியத்தை விளைவிப்பதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தைத் தருவதும்,,

சுய படிகமாய் இன்ப பத்ம பதமே அடைய உணராதே (suya padigamAy inba padhma padhamE adaiya uNarAdhE) : and pure as the natural crystal sphatika hallowed lotus-like feet – instead of desiring to attain them, சுயமான படிகம் போன்ற தூய இன்பத்தை உண்டாக்குவதும், தாமரைக்கு நிகரானதுமான உன் திருவடிகளை அடைந்துய்யும் நெறியை அடியேன் உணராமல்,,

கருவில் உருவே தங்கு சுக்கில நிதான வளி பொரும (karuvil uruvE thangu sukkila nidhAna vaLi poruma ) : I took shape in (my mother's) womb wherein collect (my father's) semen, and was fired up by the Pranic Air; நிதான வளி பொரும் = பிராண வாயு வந்து பூரிக்க

அதிலே கொண்ட முக்குண விபாக நிலை கருத அரியா வஞ்சக கபடம் மூடி உடல் வினை தானே கலகம் இடவே (adhilE koNda mukguNa vibAga nilai karudha ariyA vanjaga kapada mUdi udal vinaithAnE kalagam idavE) : and in which was fitted the three attributes (Sathvam, Rajas and Thamas - namely, tranquility, aggressiveness and lethargy) in various proportions and, covered by un-contemplable deceit and treachery, (that form) did evil acts that created trouble; அவ்வுருவத்தில் பொருந்திய சத்துவ, இராஜச, தாமசம் என்னும் மூன்று குணங்களின் வேறு பாடுடைய நிலையை நினைப்பதற்கு முடியாத வஞ்சனையுடன் கூடிய கபட குணத்தால் மூடப் பட்டு உடலினால் வந்த தீ வினைகள் கலகங்களைச் செய்ய

பொங்கு குப்பை மல வாழ்வு நிஜம் என உழலும் ( pongu kuppai mala vAzhvu nijam ena uzhalum ) : I wandered without realizing that the body is covered merely by the three rubbish dregs (of arrogance, karma and delusion), and believed it to be true; மிகுந்த குப்பைக்குச் சமமான மும்மலத் தொடர்பால் வந்த (அநித்திய) வாழ்வையே நிலைத்தது என்று திரிபவனும்,

மாயம் செனித்த குகையே உறுதி கருது அசுழம் ஆம் இந்த மட்டை தனை ஆள உனது அருள் தாராய் ( mAyam jeniththa guhaiyE uRudhi karudhu asuzhamAm indha mattai thanai ALa unadhu aruLthArAy) : and I am a dog who believes this body, a cave in which is born the illusion, to be permanent. Kindly give me your Grace to rule this body. மாயா குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றது எனக் கருதும் நாய்க்குச் சமமானவனுமாகிய மூடனாகிய இவ்வடியேனை ஆட்கொள்ள நீ அருள் புரிவாயாக.

The following lines describe the nature of Universal Consciousness and identifies Muruga with it.

ஒரு நியமமே விண்ட சட் சமய வேத அடி முடி நடுவுமாய் அண்ட முட்டை வெளி ஆகி (oru niyamamE viNda shat samaya vEdha adi mudi naduvumAy aNda muttai veLiyAgi) : You are the beginning, middle and the end of the vedas that contain within them the six religions which speak of only one doctrine, and You manifest as many worlds and the space beyond, ஒரே விதியை சொன்ன ஆறு சமயங்களையும் தன்னகத்தே கொண்ட வேதங்களின் முதலும் முடிவும் நடுவுமாகி, உருண்டை வடிவமாக உள்ள அண்டங்களாகவும் அதற்கப்பாலுள்ள பெரு வெளியாகவுமாகி; பிரம்மாண்டம் /ஆகாயத்தை உலகப் படைப்புக்கு காரணமான ஹிரண்யகர்பன் (தங்க முட்டை / Golden egg) என வேதம் உரைக்கிறது.,

உயிர் உடல் உணர்வு அது ஆய் எங்கும் உற்பனமது ஆக அமர் உளவோனே (uyir udal uNarvu adhAy engum uRpanamadhAga amar uLavOnE) : and appear as the body, the life infusing the body and the mind and emotions associated with the body, and pervading the entire universe as an imperishable matter. ஆன்மாக்களின் உயிருக்கு உயிராகவும் உடலாகவும் அறிவுமாகி, எங்கும் நீக்கமற நிறைந்து தோன்றுபவனுமாகி உள்ள நித்தியப் பொருளே, உற்பனம் = தோற்றம், பிறப்பு, உண்மை, உயர்வு;

உத தரிசமாம் இன்பப் புது அமிர்த போக சுகம் உதவும் (udhadharisamAm inba puththamirtha bOga sugam udhavum ) : You bestow unlimited, eternal and fresh nectar-like bliss that springs like a water fountain, தண்ணீர் ஊற்றெடுப்பது போல மாறாத இன்பத்தை நல்கும் அமிர்தத்தை ஒத்த சிவலோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற

அமல ஆனந்த சத்தி கர(ம்)(Anandha saththi karam) : You are the unstained form of pleasure, my Great Lord! You hold the powerful Spear in Your hand!

மேவு உணர் அ உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு குரு நாதா (mEvu uNar a uru piraNavA manthra karthavyam Aga varu gurunAthA ) : You personify the PraNava ManthrA, and represent with Your form its meaning and primordial essence, Oh Great Master! பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு முதன்மைப் பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதரே!

பருதி கதிரே கொஞ்சு நல் சரண நூபுரம் அது அசைய (parudhi kadhirE konju naR charaNa nUpuram adhu asaiya) : The anklets on Your holy feet radiate the sun's rays, making lilting sound; சூரியப் பிரகாசத்தை இனிது வெளிப் படுத்தும் நன்மையைத் தரும் தேவரீரது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிது ஒலி செய்ய, பருதி (parudhi) : sun;

நிறை பேர் அண்டம் ஒக்க நடமாடும் கன பத கெருவிதா துங்க வெற்றி மயில் ஏறும் ஒரு திறலோனே (niRai pEraNda mokka nadamAdu gana padha keruvidhA thunga vetri mayil Erum oru thiRalOnE) : You mount the pure and victorious peacock that has the eminent feet which have the pride of dancing in all the worlds and swinging in tandem with them. நிறைந்த பெரிய அண்டங்களில் எல்லாம் ஒருங்கு அசைய நடனம் செய்கின்ற பெருமை பொருந்திய அடிகளை உடைமையால் செருக்குள்ளதும், பரிசுத்தமும் வெற்றியும் கொண்டுள்ள மயிலேறும் ஒப்பற்ற ஆற்றல் உடையவனே.

பணியும் அடியார் சிந்தை மெய் பொருள் அது ஆக நவில் (paNiyum adiyAr chindhai mey poruLadhAga navil) : The hearts of the devotees worshipping You proclaim that only "true substance" (universal Truth or consciousness) is the ManthrA, namely, பணிகின்ற அடியார், தமது உள்ளத்தில் மெய்ப்பொருளாகக் கருதிப் போற்றும்

சரவணபவா ஒன்று வல் கரமும் ஆகி வளர் (saravaNa bavA ondru vaRkaramumAgi vaLar) : "SaravaNabavA", which six syllables expand into the most powerful effulgence (dispelling the darkness of ignorance); ‘சரவணபவா’ எனும் ஆறெழுத்துகள் பொருந்திய வலிய பேரொளியாகி வளர்கின்ற பழநிமலை; வல் (val) : powerful; கரம் (karam ) : light; வற்கரம் = வலிய ஒளி, பேரொளி

பழநி மலை மேல் நின்ற சுப்ரமணியா அமரர் பெருமாளே. (pAzhani malai mEnindra subramaNiyA amarar perumALE.) : in Mount Pazhani, on which You stand as SubramaNiyan; You are the Lord of the DEvAs, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே