71. சிவனார் மனம்

ராகம்: ஜோன்புரி/ சங்கராபரணம்கண்டசாபு(2½) 1+ 1½
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய்குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின்
செயலேவி ரும்பியுளம்நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலெனவரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமதுபுரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ்மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகருவிளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர்வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக
செகமேல்மெய் கண்டவிறல்பெருமாளே

Learn the Song

Song In Jonpuri Raga

Know Jonpuri (janya rāga of Natabhairavi, shadava sampoorna raga)

Arohanam: S R2 M₁ P D1 N2 Ṡ    Avarohanam: Ṡ N2 D1 P M1 G2 R2 S


Dr. Charulata Mani on SankarabharaNam, Isai PayaNam



Song In Sankarabharanam Raga


sivanaar manam kuLira upadhEsa manthram iru
sevi meedhilum pagarsey gurunaathaa
sivakaama sundhari than varabaala kandha nin
seyalE virumbi uLam ninaiyaamal
avamaayai kondulagil virudhaa alaindhuzhalum
adiyEnai anjal ena vaaravENum
aRivaagamum peruga idaraanadhum tholaiya
aruL nyaana inbam adhu purivaayE
navaneethamum thirudi uralOde ondrum ari
raguraamar chindhai magizh marugOnE
navalOkamum kaithozhu nijadhEva alankirutha
nalamaana vinjaikaru viLaikOvE
dhevayaanai ankuRamin maNavaaLa sambramuRu
thiRalveera minju kadhir vadivElaa
thiruvaavi nankudiyil varuvEL savundharika
jega mEl mey kaNda viral perumaaLE.


Paraphrase

சிவனார் மனம் குளிர உபதேச மந்த்ரம் இரு செவி மீதிலும் பகர் செய் குரு நாத (sivanAr manam kuLira upadhEsa manthram iru sevi meedhilum pagarsey gurunAthA) : You are my spiritual master who delighted the heart of Shiva by giving him mantropadesha through His two ears; உபதேச மந்திரத்தை அவரது இரு செவிகளிலும் [(அ) அவரது பெருமை பொருந்திய செவியில்] சொன்ன குருநாதனே! இரு செவி / இருமை+ செவி, இருமை = பெருமை,

நிர்ணயிக்கப்பட்ட காலம் மற்றும் இடத்தில் உபதேச முறையினால் மட்டுமே அறியத்தக்க பிரணவ உபதேசத்தை சிவனார் மாசி மகத்தன்று திருத்தணி மலையில் குமரனை வணங்கி ஒரு கணம் தவம் செய்து வடதிசை நோக்கி நின்று பிரணவ உபதேசம் பெற்றார்.

சிவகாம சுந்தரி தன் வர பால கந்த (sivakAma sundhari than varabAla kandha) : You are Kandha, the illustrious son of Parvati or Sivakama Sundari

நின் செயலே விரும்பி உளம் நினையாமல் அவ மாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும் அடியேனை அஞ்சல் என வரவேணும் (nin seyalE virumbi uLam ninaiyAmal avamAyai kondu ulagil virudhA alaindhu uzhalum adiyEnai anjal ena vAravENum) : Instead of devoting time to Your service, gets deluded into rambling aimlessly in the worldCome with the assurance "Don't fear" to rescue me, உனக்கு (அடிமை செய்யும்) தொண்டையே விரும்பி உள்ளத்தில் நின்னயாமல், கேடுதரக்கூடிய மாயையிற் பட்டு உலகிலே வீணாக அலைந்து திரியும் அடியேனை அஞ்சாதே எனக் கூறியருள வரவேணும்;

எல்லா நடப்புகளிலும் இறைவன் சித்தத்தையே கண்டு அதை மனப்பூர்வமாக ஏற்று, இறைவனின் பெருங்கருணைத் திறத்தை போற்றாமல், உலக பசுபாச சொந்தங்களாகிய படுமாயையிற் சிக்கி சுழன்று திரிகின்ற அடியேனுக்கு நீ அபயம் தர வேண்டும்.

அறிவு ஆகமும் பெருக இடரானதும் தொலைய அருள் ஞான இன்பம் அது புரிவாயே (aRivAgamum peruga idarAnadhum tholaiya aruL nyAna inbam adhu purivAyE) : In order that my inner knowledge surges and the obstacles get crushed, give me with grace the joyous and blissful wisdom. ஊன சரீரத்தை விட்டு ஞான சரீரத்தைப் பெறவும், (பிறப்பதுமாகிய) துன்பமானது அறவே நீங்கவும், திருவருள் ஞானத்தால் விளையும் அத்துவிதப் பேரின்பத்தைத் தந்து அருள்புரிய வேண்டும்.

நவநீதமும் திருடி உரலோடு ஒன்றும் அரி ரகுராமர் சிந்தை மகிழ் மருகோனே (navaneethamum thirudi uralOde ondrum ari ragurAmar chindhai magizh marugOnE) : You are the pleasing nephew of Sri Raghurama who stole butter and was tied to the mortar,

நவ லோகமும் கை தொழ நிச தேவ (navalOkamum kai thozhu nijadhEva) : You are the true lord worshipped by all the people in the nine regions of the earth. ஒன்பது கண்டத்தினர்களும் கைகூப்பி வணங்குகின்ற ஆதியும் அந்தமும் இல்லாத தனிப்பெருந்தலைவரே!

அலங்கிருத நலமான விஞ்சை கரு விளை கோவே (alankirutha nalamAna vinjaikaru viLaikOvE) : You are well adorned and attired, and you, by your mystical power of Maya or illusion, create countless births in this world; பொன் மணிகளால் அலங் கரிக்கப்பட்டவரே! நலம் தரும் மாயவித்தையால் பிறப்புத் தோற்றங்கள் பலவற்றை விளைவிக்கும் தலைவனே; நலமான = நலம் தருவதான; விஞ்சை தரு விளை = மாய வித்தையால் பிறப்புத் தோற்றங்கள் தோற்றுவிக்கும் தலைவனே!

தெ(ய்)வ யானை அம் குற மின் மணவாள ( dhevayAnai am kuRamin maNavALa) : You are the consort of both Devayani and VaLLi, the damsel of KuRavas!

சம்ப்ரம் உறு திறல் வீர மிஞ்சு கதிர் வடிவேலா (sambramuRu thiRalveera minju kadhir vadivElA) : You are an illustrious and brave warrior who holds the resplendent and sharp Spear! சம்ப்ரம் உறு (sambramuRu) : பெருமை பொருந்திய; மிஞ்சு( minju) : exceeding; கதிர் ( kadhir) : rays; மிஞ்சு கதிர்(minju kadhir) extremely bright;

திருவாவினன்குடியில் வரு வேள் சவுந்தரிக (thiru Avinankudiyil varuvEL savundharika) : You reside in ThiruvAvinankudi and are handsome.

செக மேல் மெய் கண்ட விறல் பெருமாளே.(jega mEl mey kaNda viRal perumALE.) : You have realized the Ultimate Truth in the Universe (probably refers to Murugan's incarnation as Rudrasanman); You are very powerful, Oh Great One! உலகில் உண்மைப்பொருளைக் கண்டு தெரிவித்த (இது உருத்திர சன்மராய் முருகவேள் சங்கத்தார் கலகம் தீர்த்த திருவிளையாடலைக் குறிக்கலாம்) திறம் வாய்ந்த பெருமாளே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே