73. சீறலசடன் வினைகாரன்

ராகம்: ஹம்சநாதம் தாளம்: ஆதி
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடிபவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலிஎவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியுனடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள்புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலிபுனைவோனே
மாக முகடதிரவீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமையுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள்பெருமாளே.


seeRal asadan vinaikaaran muRaimayili
theemai puri kabadi bava nOyE
thEdu parisi gana needhi neRi muRaimai
seermai siridhumili evarOdum
kooRu mozhiyadhu poyyaana kodumaiyuLa
kOLan aRivili unadi pENaa
kooLan eninum enai neeyun adiyorodu
koodum vagaimai aruL purivaayE
maaRu padum avuNar maaLa amar porudhu
vaagai yuLa mavuli punaivOnE
maaga muga dadhira veesu siRai mayilai
vaasi yena udaiya murugOnE
veeRu kalisai varu sEva ganadhidhaya
mEvum oru perumai udaiyOnE
veerai uRai kumara dheera dhara pazhani
vEla imaiyavargaL perumaaLE.

Learn the Song



Raga Hamsanadam (Janyam of 60th mela Neethimathi)

Arohanam: S R2 M2 P N3 S    Avarohanam: S N3 P M2 R2 S


Paraphrase

சீறல் அசடன் வினைகாரன் முறைமை இலி தீமை புரி கபடி (seeRal asadan vinaikAran muRaimayili theemai puri kabadi) : I am given to outbursts of short temper; I do bad deeds; I am a characterless, and a sinning schemer;

பவ நோயே தேடு பரிசி கன(ம்) நீதி நெறி முறைமை சீர்மை சிறிதும் இலி (bava nOyE thEdu parisi gana needhi neRi muRaimai seermai siridhum ili) : I seek the disease of repeated births; I do not have even a vestige of moral, honesty, justice or greatness;

எவரோடும் கூறு மொழியது பொய்யான கொடுமை உள கோளன் அறிவு இலி (evarOdum kURu mozhi adhu poyyAna kodumaiyuLa kOLan aRivili) : I speak untruth to everybody; I am evil minded, wicked and unintelligent;கூறு மொழியது பொய்யான கொடுமை உள (kURu mozhi adhu poyyAna kodumaiyuLa) : கொடுத்த வாக்குறுதியை பொய்யாக்குபவன் ;

உ(ன்)னடி பேணா கூளன் எனினும் எனை நீ உன் அடியாரொடு கூடும் வகைமை அருள் புரிவாயே (unadi pENA kULan eninum enai neeyun adiyarodu kUdum vagaimai aruL purivAyE) : Though I am a scum who never worshipped Your feet, You must bless me so that I join the band of Your devotees;

மாறு படும் அவுணர் மாள அமர் பொருது வாகை உள மவுலி புனைவோனே (mARu padum avuNar mALa amar porudhu vAgai yuLa mavuli punaivOnE) : You fought and killed the demons who deviated from the right path and wore the Victory Crown!

மாக முகடு அதிர வீசு சிறை மயிலை வாசி என உடைய முருகோனே (mAga mugadu adhira veesu siRai mayilai vAsi yena udaiya murugOnE) : Your peacock flew with fluttering feathers over the mountains shaking their peaks, and You mounted it as if it were a horse!

வீறு கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே (veeRu kalisai varu sEvaganadhu idhaya mEvum oru perumai udaiyOnE) : You have the prestigious honor of being in the heart of the King of the famous Kalisai.

வீரை உறை குமர தீரதர பழநி வேல இமையவர்கள் பெருமாளே. (veerai uRai kumara dheera dhara pazhani vEla imaiyavargaL perumALE.) : Oh KumarA, You reside in the place called Veerai. You have tremendous valour, Oh VElA, having Your abode at Pazhani! You are worshipped by all DEvAs, Oh Great One! தீரதர ( dheera dhara ) : valorous;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே