54. விந்ததினூறி

ராகம்: யமுனா கல்யாணிதாளம்: மிஸ்ர சாபு (2 + 1½)
விந்ததி னூறி வந்தது காயம்
வெந்தது கோடியினிமேலோ
விண்டு விடாம லுன்பத மேவு
விஞ்சையர் போலஅடியேனும்
வந்துவி நாச முன்கலி தீர
வண்சிவ ஞானவடிவாகி
வன்பத மேறி யென்களை யாற
வந்தருள் பாதமலர்தாராய்
எந்தனு ளேக செஞ்சுட ராகி
யென்கணி லாடுதழல்வேணி
எந்தையர் தேடு மன்பர்ச காய
ரெங்கள் சுவாமி யருள்பாலா
சுந்தர ஞான மென்குற மாது
தன்றிரு மார்பிலணைவோனே
சுந்தர மான செந்திலில் மேவு
கந்தசு ரேசர் பெருமாளே

Learn the Song



Yamuna Kalyani (Janyam of 65th mela Kalyani; Sampoorna Bhashanga)

Arohanam: S R2 G3 M2 P D2 N3 S    Avarohanam: S N3 D2 P M2 G3 M1 R2 S   OR
S N3 D2 P M2 G3 M1 G3 R2 S (M1 anya swara)


Paraphrase

விந்து அதின் ஊறி வந்தது காயம் (vindhadhinURi vandhadhu kAyam) : This body shoots from a sperm,

வெந்தது கோடி (vendhadhu kOdi) : and has been consumed by fire millions of times.

இனிமேலோ விண்டு விடாமல் (inimElO viNdu vidAmal) : In order that I don't separate from you,

உன் பத மேவு விஞ்சையர் போல (un padha mEvu vinjayar pOla ) : like the wise who desire and worship your feet,

அடியேனும் வந்து விநாச முன் கலி தீர (adiyEnum vandhu vinAsa mun kali theera ) : I too should avert the destructive karmas of previous births by worshipping Your feet,

வண் சிவ ஞான வடிவாகி (vaN siva nyAna vadivAgi) : (let me) embody Siva's form of knowledge, வளமையான ஞானத்தின் வடிவை அடைந்து,

வன் பதம் ஏறி என் களை ஆற (van padham ERi en kaLaiyARa) : and get liberated from the weariness of countless births and attain the strong moksha; வலிமையான முக்திப்பதத்தைப் பெற்று, என் பிறவிக் களைப்பு தீருமாறு; என் களை ஆற - பிறவியின் களைப்புத் தீரும் பொருட்டு

வந்தருள் பாத மலர்தாராய் (vandharuL pAdha malar thArAy) : kindly come and grant me your kind and lotus-like feet.

எந்தனுள் ஏக செம் சுடராகி (endhan uLEga sen chudarAgi) : Lighting and glowing in my heart as a unique red flame, ஏக = ஒப்பற்ற;

என் கணில் ஆடு தழல் வேணி (en kaNilAdu thazhal vENi) : and dancing in my eyes with His glowing tresses

எந்தையர் தேடும் அன்பர் சகாயர் (endhaiyar thEdum anbar sahAyar) : my father and a helper of those who seek Him with love, தேடும் அன்பர் சகாயர் = அன்பினால் தேடுகின்ற அடியவர்க்கு உதவுபவர்,

எங்கள் சுவாமி அருள்பாலா (engaL suwAmi aruL bAlA) : Such is my Lord and You are His son!

சுந்தர ஞான மென்குற மாது (sundhara nyAna men kuRa mAdhu) : the beautiful, wise and extremely soft tribal damsel Valli;

தன் திரு மார்பில் அணைவோனே (thanthiru mArbil aNaivOnE ) : He embraces Valli against His auspicious chest,

சுந்தரமான செந்திலில் மேவு (sundhara mAna sendhilil mEvu) : and resides in the beautiful Tiruchendur,

கந்த சுரேசர் பெருமாளே.( kandha surEsar perumALE.) : Oh Kantha, my Great Lord who is worshipped by the chief of the celestials!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே