61. உலகபசு பாச


ராகம்: சௌராஷ்ட்ரம்அங்க தாளம் 2½ + 1 ½ + 1½ + 3(8½)
உலகபசு பாச தொந்தமதுவான
உறவுகிளை தாயர் தந்தைமனைபாலர்
மலசலசு வாச சஞ்சலமதாலென்
மதிநிலைகெ டாம லுன்ற னருள்தாராய்
சலமறுகு பூளை தும்பையணிசேயே
சரவணப வாமு குந்தன்மருகோனே
பலகலைசி வாக மங்கள்பயில்வோனே
பழநிமலை வாழ வந்தபெருமாளே.

ulaga pasu paasa thondham adhuvaana
uRavu kiLai thaayar thandhai manai baalar
mala jala suvaasa sanchalam adhaale en
madhi nilai kedaamal undhan aruL thaaraay
jalamarugu pooLai thumbai aNi sEyE
saravanabavaa mukundhan marugOnE
palakalai sivaagamangaL payilvOnE
pazhani malai vaazha vandha perumaaLE.

Learn the Song



Raga Sowrashtram (Janyam of 17th mela Suryakantham)

Arohanam: S R1 G3 M1 P M1 D2 N3 S    Avarohanam: S N3 D2 N2 D2 P M1 G3 R1 S


Paraphrase

To attain equanimity, we must be free from attachments and understand our true Self. ஏகாக்கிரக இறை சிந்தனைக்கு தடையாக நிற்பது உறவுகளால் வரும் பந்த பாசங்களும் மலசல சுவாசத்தினால் ஏற்படும் உபாதைகளும் தான். பசுவானது தன்னை பிணித்திருக்கும் பந்தத்திலிருந்து விலகி பசு ஏறும் பரமனாகிய பதியின் ஞானம் பெற்று உய்ய திருவருள் வேண்டும் பாட்டு இது.

உலக பசு பாச தொந்தம் அது ஆன உறவு கிளை தாயர் தந்தை மனை பாலர் (ulaga pasu pAsa thondham adhuvAna uRavu kiLai thAyar thandhai manai bAlar) : In this world, (fettering the souls) are life and affection related attachments to relatives, mother, father, children, உலகத்தில் ஆன்மாக்களைக் கட்டுப்படுத்தும் மல பந்த சொரூபங்களான சுற்றம், சகோதரர், தாய் தந்தையர், மனைவி, குழந்தைகள் முதலியவர்களாலும்,
பாசத்துடன் சம்பந்தப்பட்ட ஆன்மா பசுவெனப்பட்டது. பதிஞானத்தால் பாச நீக்கமுற்ற முக்தி பெற்ற ஆன்மா பசுவெனப்படாது.

மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள் தாராய் (mala jala suvAsa sanchalam adhAle en madhi nilai kedAmal undhan aruL thArAy) : In order that my mental equilibrium is not disturbed by physical ailments resulting from disturbances in excretory and breathing functions, kindly give me your blessings. மலஜல உபாதைகளாலும் பிராண வாயுவினாலும் உண்டாகும் துன்பங்களாலும், அடியேனுடைய அறிவுநிலையானது கெட்டுப் போகாமலிருக்குமாறு தங்களது திருவருளைத் தந்து காத்தருள வேண்டும்.
எவ்வாறு முருகனுடைய மயில் பாம்பை தன் காலடியில் அடக்கி வைத்துள்ளதோ அதே போல் நாமும் உலக பந்தங்களையும் ஆசைகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்திருக்கவும் ஆன்மாவை மறைக்கும் ஆணவ மலம் எனும் இருளை போக்குவதற்கும் ஞான சொரூபமாயுள்ள சிவ குமாரன் அருள் வேண்டும்.

சலம் அறுகு பூளை தும்பை அணி சேயே (jalamarugu pULai thumbai aNi sEyE) : You are the son of SivA who adorns His tresses with river Ganga, aRugam (cynodon) grass, pULai (Indian laburnum) flower and thumbai (leucas) flower.

சரவண பவா முகுந்தன் மருகோனே (saravanabavA mukundhan marugOnE) : Oh SaravanabhavA, the nephew of Mukunda (Vishnu). முகுந்தன் = முக்தியை கொடுப்பவர்;

பல கலை சிவ ஆகமங்கள் பயில்வோனே (palakalai sivAgamangaL payilvOnE) : You preached several literary arts and Siva AgamAs (Saivite scriptures) பயில்வோன் = கூறியவர்; அருளியவர்;
ஆகமங்கள் என்பவை இறைவனால் அருளப்பெற்ற நூல்களாகும். இவை மனித குலத்தவர்கள் நித்திய மோட்ச நிலையை அடைவதற்குரிய வழிமுறைகளைப் போதிக்கின்றன. சிவபெருமான் மகேந்திர மலையில் அமர்ந்திருந்து ஆகமங்களை அருளினார் என்கிறது திருவாசகம். ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு சிவ பெருமானே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பாதங்களையும் விளக்கி ஆகமங்களை கூறினார். சிவபெருமானுக்கும் ஆறுமுக சிவனாகிய முருகனுக்கும் பேதமில்லை என்று கருதி அருணகிரிநாதர் முருகன் சிவாகமங்கள் பயில்வோன் என்று கூறுகிறார்.

பழநி வாழ வந்த பெருமாளே. (pazhani malai vAzha vandha perumALE.) : You have chosen as Your abode, Mount Pazhani, Oh Great One!

Additional Explanation

உடல் வெளிப்படுத்தும் கழிவுப்பொருளான வியர்வை, சிறுநீர், மலம் போல் நம் மனம் தொடர்பான உணர்வுகள் வெளிப்படுத்தும் மலங்கள் மூன்று. அவை ஆணவம், கன்மம், மாயை என்று சைவ சித்தாந்தங்கள் வகைப்படுத்துகின்றன. மலம் என்பதை குற்றம், பாசம், தளை, தடை, அசித்து என்றும் கூறலாம். சிவபெருமான் முப்புரம் எரித்தான் என்பது இந்த மும்மலங்களை அழித்தான் என்பதைக் காட்டும்.

சைவசித்தாந்தம் பதி, பசு, பாசம் எனும் முப்பொருள் உண்மையைப் பற்றிக்கூறுகின்றது. பதி, பசு, பாசம் எனப்படும் இவை மூன்றுமே அனாதிகள். அதாவது தொடக்கம் இல்லாதவை; அதாவது இவற்றை யாரும் தோற்றுவிக்கவில்லை; தோன்றாமல், அழியாமல், எப்போதும் இருக்கின்றன.

இதில் பதி என்னும் இறைவன் சத்துப் பொருள் பதி அறியாமையால் பற்றப்படாததான பேரறிவுப் பொருள். பிறர் அறிவிக்காமலே தானே அறியும் தன்மையானது. இறைவன் என்னும் பதி, பாசம் என்னும் தளைகள் அணுக முடியாத தூய முழுமையான அறிவினைக் கொண்டவன். அவன் ஐம்பொறி-புலன்கள் கொண்ட உடல் இல்லாமலேயே எல்லாவற்றையும் அறிபவன். பதி சூக்ஷ்மப் பொருளாகவும், பரந்தும், ஸ்தூலப் பொருள் உள்ளடங்கியும் (வியாபியாகவும் வியாபகமாகவும்) இருக்கும். கடல் போன்ற பதியில் கடல்நீர் போன்று பசுவும் நீரில் கலந்துள்ள உவர்ப்பு போன்று பாசமும் கலந்துள்ளது.

பாசம் அசத்து பொருள். உயிர்களுக்குக் கருவியாக உடம்பையும், களமாக உலகத்தையும், படைத்துக் கொடுக்கப் பயன்படும் மூலப் பொருள் தான் பாசம் என்ற தளையாகிய மும்மலங்கள். சடமாகிய பாசம் அறிவித்தாலும் அறியமாட்டா.

பசு என்பது ஆன்மா. ஆன்மாவானது பாசமான மாயையால் கட்டுண்டது. அது இல்லாததை இருப்பதாகக் காட்டுவது. கானல் நீருக்கு ஒப்பான அதனை இயக்குவது ஆணவ மலம். ஆணவ மலம் உயிருடன் இணைந்துள்ள, காலம் கடந்த இயற்கை மலம். இது செம்பில் களிம்பு போல ஆன்மாவில் பற்றி இருக்கும். இதனை இருள் மலம் என்பர். இதனை அழிக்க முடியாது, அடக்க முடியும்.

பசு அறிவற்ற சடமும் அன்று, அறிவுடைய பொருளுமன்று. எதைச்சாந்ததோ அதன் தன்மையைப் பெறுவதால் அது சதசத்து பொருளாகின்றது. பதியைச் சார்தால் சத்தெனவும் பாசத்தைத் சார்ச்தால் அசத்து எனவும் நிலை பெறுகின்றது.

இயல்பாகவே, உயிர்களை பிடித்து இருக்கும் பாசம் என்ற அறியாமையைப் போக்கவே, உடல்களுக்கு கருவிகளைத் தந்து, உலகம் என்னும் அறிவுக்கூடத்தில் உலவ விடுகிறான்; உடல்கள் மூலம் மெய் அறிவு பெற்றால், உடல்களை விட்டு நீங்கும்போது உயிர்களுக்கு பிறவிகள் நீங்கிவிடும்!

Pati, pasu and pasa are the three most important concepts of Saivism. Pati is god, envisioned as a cowherd, and Pasu is the cow or the soul that is tethered by Pasa/rope that binds or limits the soul and keeps it from realizing its full potential. All the jivas including the humans are considered as animals because we are subject to delusion and ignorance and do not know our true nature. The three pasas (or impurities known as three malas (or மும்மலம்) that afflict us are anava (egoism), karma and maya (delusion). Anavamala makes us ego-centric and is the cause of duality (instead of feeling oneness with god), negative feelings of envy, anger, greed, lust and pride. Because of anavamala, jivas become envious, greedy, lustful and unable to discriminate between good and bad actions. This binds them to the second impurity, karma.

Karma binds the souls to their actions and gives rise to an endless cycle of cause and effect. Maya, the third impurity, binds the souls to the objects of enjoyment through desires, and involves them deeply with the world of phenomenal experience (samsara). Deluded thus by the power of maya, they continue their existence as ignorant beings, mistaking the untruth as truth, and indulge in actions that would bind them further to the consequences of such actions.

Comments

  1. Wonderful explanation. விளக்கம் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே