58. அருத்தி வாழ்வொடு

ராகம்: பிலஹரிஅங்க தாளம் (10 ½)
1 ½ + 2 + 2 + 2 + 3
அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியுமுறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடுவளநாடும்
தரித்த வூருமெ யெனமன நினைவதுநினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலதுதருவாயே
எருத்தி லேறிய இறையவர் செவிபுகவுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக ளிருபாதம்
பரித்த சேகர மகபதி தரவருதெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறைபெருமாளே.

Learn the Song


Raga Bilahari (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

aruththi vaazhvodu thanagiya manaiviyum uRavOrum
aduththa pErgaLum idhamuRu magavodu vaLanaadum
thariththa oorume yena mana ninaivadhu ninaiyaadhun
dhanaip paraaviyum vazhipadu thozhiladhu tharuvaayE eruththil ERiya iRaiyavar sevipuga upadhEsam
isaiththa naavina idhaNuRu kuRamagaL irupaadham
pariththa sEkara magapathi tharavaru dheyvayaanai
padhikkoL aaRirubuya pazhaniyil uRai perumaaLE.

Paraphrase

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியும் உறவோரும் (aruththi vAzhvodu thanagiya manaiviyum uRavOrum) : Congenial life, cheerful wife and relatives, அருத்தி வாழ்வொடு = ஆசையுடன் கூடிய வாழ்க்கையும்; தனகிய = உள்ளத்தில் களிப்பைத் தரும்;

அடுத்த பேர்களும் இதம் உறு மகவொடு வளநாடும் (aduththa pErgaLum idhamuRu magavodu vaLanAdum) : friends, happiness-yielding and comforting children and prosperous country

தரித்த ஊரும் மெய் என மனம் நினைவது நினையாது (thariththa Uruம் meyena mana ninaivadhu ninaiyAdhu ) : favorable city – without considering these to be eternal

உன் தனை பராவியும் வழிபடு தொழிலது தருவாயே (undhanai parAviyum vazhipadu thozhiladhu tharuvAyE) : Grant me the work of praising and worshipping you. பராவியும் = போற்றி வழிபடும்;

எருத்தில் ஏறிய இறையவர் செவி புக உபதேசம் இசைத்த நாவின (eruththil ERiya iRaiyavar sevipuga upadhEsam isaiththa nAvina) : You possess the sweet tongue that spoke the upadesa mantra to reach the ears of the bull-mounting Shiva

இதண் உறு குற மகள் இரு பாதம் பரித்த சேகர (idhaNuRu kuRamagaL irupAdham pariththa sEkara ) : You held the two feet of VaLLi, the damsel on the platform in the millet field, and placed them on Your head in a gesture of love!

மகபதி தர வரு(ம்) தெய்வ யானை பதி கொள் (magapathi tharavaru dheyvayAnai padhikkoL) : You are the husband of the chief of celestials Indra's daughter Deivayanai

ஆறிரு புய பழநியில் உறை பெருமாளே.(ARirubuya pazhaniyil uRai perumALE.) : You have twelve shoulders and reside at Pazhani. ஆறிரு ( ARiru) : Two-sixes or twelve;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே