50. வஞ்சங்கொண்டு


ராகம்: பூர்வி கல்யாணிதாளம்: திச்ர த்ரிபுடை (7)
வஞ்சங்கொண் டுந்திட ராவண
னும்பந்தென் திண்பரி தேர்கரி
மஞ்சின்பண் புஞ்சரி யாமெனவெகுசேனை
வந்தம்பும் பொங்கிய தாகஎ
திர்ந்துந்தன் சம்பிர தாயமும்
வம்புந்தும் பும்பல பேசியுமெதிரேகை
மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு
ரங்குந்துஞ் சுங்கனல் போலவே
குண்டுங்குன் றுங்கர டார்மரமதும்வீசி
மிண்டுந்துங் கங்களி னாலெத
கர்ந்தங்கங் கங்கர மார்பொடு
மின்சந்துஞ் சிந்தநி சாசரர்வகைசேர
வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி
ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க
ளுந்துந்துந் தென்றிட வேதசைநிணமூளை
உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்
டிண்டிண்டென் றுங்குதி போடவு
யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்மருகோனே
தஞ்சந்தஞ் சந்சிறி யேன்மதி
கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
தந்தென்றின் பந்தரு வீடதுதருவாயே
சங்கங்கஞ் சங்கயல் சூழ்தட
மெங்கெங்கும் பொங்கம காபுநி
தந்தங்குஞ் செந்திலில் வாழ்வுயர்பெருமாளே.

Learn the Song



Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 P D2 P S    Avarohanam: S N3 D2 P M2 G3 R1 S

Paraphrase

வஞ்சம் கொண்டும் திட ராவணனும் ( vanjam koNdum thida rAvaNanum) : With wickedness in mind, the strong Ravana

பந்து என் திண் பரி தேர் கரி ( pandhu en thiN pari thEr kari) : with the help of an army of strong horses, elephants and chariots that dash like balls; பந்துபோல் வேகமாகச் செல்லுகின்ற வலிமையுடைய குதிரை, தேர், யானை, பரி ( pari ) : Horse; கரி (kari ) : elephant;

மஞ்சின் பண்பும் சரியாம் என வெகு சேனை வந்து (manjin paNbum sariyAm ena vegu sEnai vandhu) : and troops of soldiers ordered neatly like layers of clouds; மேகம்போல் திரண்டு வருகின்ற, மிகுந்த சேனைகளுடன் போர்க்களத்திற்கு வந்து, மஞ்சு (manju) : cloud;

அம்பும் பொங்கியதாக எதிர்ந்தும் தன் சம்பிரதாயமும் வம்பும் தும்பும் பல பேசியும் (ambum pongiyadhAga edhirndhum than sambiradhAyamum vambum thumbum pala pEsiyum ) : Even when he (Ravana) faced clusters of the enemy's arrows in the battlefield, he kept boasting vainly about his valour, and ridiculing his opponent.

எதிரே கை மிஞ்ச என்றும் சண்டை செய் போது (edhirE kai minji endRum sandai sey pOdhu) : When he fiercely fought with firm thoughts of victory with the army of the opponent / remarking that the enemies far exceeded them in numbers and fought fiercely, எதிரியை விட தன் கை மேலோங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சண்டை செய்யும் போது/ எதிரிகள் சேனைகள் மிகுதி என்று கூறி சண்டை செய்யும் போது

குரங்கும் துஞ்சும் கனல் போல வெகுண்டு குன்றும் கரடு ஆர் மரம் அதும் வீசி (kurangum thunjum kanal pOla vegundum kunRum karadu Ar maram adhum veesi) : the enraged monkeys looking like burning embers displayed their anger by throwing boulders from the mountains and branches from rough trees, துஞ்சும் கனல் போலவே = நிலை பெற்ற நெருப்புப் போல;

மிண்டும் துங்கங்களினாலே தகர்ந்து அங்கம் கம் கரம் மார்போடு மின் சந்தும் சிந்த (mindum thunggangaLinAle thagarndhu angam kam karam mArbodu min sandhum sindha) : With the rocks hewn from the hills, they crushed the bodies, heads, arms, chests and other lustrous parts of the enemy. மிகுந்த மலைகளினால் நொறுங்கிய உடம்பு தலை கை இவைகளுடன் ஒளி விடுகின்ற உடற்கீல்களையும் சிதற வைத்து; துங்கம் (thungam) : mountain, elevation; மிண்டும் = பேர்ந்து எடுக்கப்பட்ட; கம் = தலை

நிசாசரர் வகை சேரவும் சண்டன் தென் திசை நாடி விழுந்து ( nisAcharar vagaisEravum chaNdan then dhisai nAdi vizhundhu ) : driving the entire clan of the demons to the South, the direction ruled by YamA (the God of Death). நிசாசரர் ( nisAcharar) : demons or rakshsas; நிசாசரர் வகை சேரவும் ( nisAcharar vagaisEravum: அசுரர்கள் இனம் முழுவதும் ; சண்டன் ( chaNdan ) : Yama;

அங்கும் சென்று எம தூதர்கள் உந்து உந்து உந்து என்றிடவே (angkum chendRu ema dhUthargaL undhu undhu endRidavE ) : and followed the messengers of YamA, ordering the demons to yield way,

தசை நிணம் மூளை உண்டும் கண்டும் சில கூளிகள் (dhasai niNa mULai uNdum kaNdum sila kULigaL ) : evil spirits were intoxicated by the sight and taste of the demons' flesh, fat and brains, கூளிகள் (kULigaL) : பேய்கள்;

டிண் டிண் டெண் என்று குதி போடவும் (diN diN enRu kudhi pOdavum) : jumped and danced in exultation to the meter of "diN diN".

உயர்ந்த அம்பும் கொண்டு வெல் மாதவன் மருகோனே (uyarndha ambum koNdu vel mAdhavan marugOnE) : you, the nephew of Rama (Vishnu) who triumphed in the battle (as described above) using lofty arrows!

தஞ்சம் தஞ்சம் சிறியேன் மதி கொஞ்சம் கொஞ்சம் துரையே அருள் தந்து என்றும் இன்பம் தரு வீடு அது தருவாயே (thanjam thanjam siriyEn madhi konjam konjam dhuraiyE aruL thandhu endrum inbam tharu veedadhu tharuvAyE) : I seek Your refuge, my Lord, my intellect is very limited; Oh Lord, kindly bless me with the blissful liberation that is everlasting!

சங்கம் கஞ்சம் கயல் சூழ் தடம் எங்கெங்கும் பொங்க (sangam kanjam kayal sUzh thadam engengum ponga ) : Conch shells, lotus and kayal fish are abundant in the surrounding tanks which are overflowing with water everywhere

மகா புனிதம் தங்கும் செந்திலில் வாழ் உயர் பெருமாளே.(mahA punitham thangum sendhilil vAzhvuyar perumALE.) : in this sacred abode of Thiruchendhur, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே