19. உததியறல் மொண்டு


ராகம்: கீரவாணிஅங்க தாளம் (6½ 2½ + 1½ + 1½ + 1)
உததியறல் மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ ருண்ட நீலமிக
வொளிதிகழு மன்றல் ஓதிநரைபஞ்சுபோலாய்
உதிரமெழு துங்க வேலவிழி
மிடைகடையொ துங்கு பீளைகளு
முடைதயிர்பி திர்ந்த தோஇதெனவெம்புலாலாய்
மதகரட தந்தி வாயினிடை
சொருகுபிறை தந்த சூதுகளின்
வடிவுதரு கும்ப மோதிவளர்கொங்கைதோலாய்
வனமழியு மங்கை மாதர்களின்
நிலைதனையு ணர்ந்து தாளிலுறு
வழியடிமை யன்பு கூருமதுசிந்தியேனோ
இதழ்பொதிய விழ்ந்த தாமரையின்
மணவறைபு குந்த நான்முகனும்
எறிதிரைய லம்பு பாலுததி நஞ்சராமேல்
இருவிழிது யின்ற நாரணனும்
உமைமருவு சந்த்ர சேகரனும்
இமையவர்வ ணங்கு வாசவனும்நின்றுதாழும்
முதல்வசுக மைந்த பீடிகையில்
அகிலசக அண்ட நாயகிதன்
முகிழ்முலைசு ரந்த பாலமுதமுண்டவேளே
முளைமுருகு சங்கு வீசியலை
முடுகிமைத வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு செந்தில் வாழ்வுதருதம்பிரானே.

Learning the Song



Raga Keeravani (21st mela)

Arohanam: S R2 G2 M1 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M1 G2 R2 S

Paraphrase

உததி அறல் மொண்டு சூல் கொள் கரு முகில் என (uthathi aRal moNdu sool koL karu mugil ena) : Like the black clouds pregnant with water drunk from the sea, கடலின் நீரை மொண்டு குடித்துக் கருக் கொண்ட கரிய மேகம் போல இருண்ட நீல நிறம் மிகுத்த உததி (udhathi) : sea; அறல் (aRal) : நுண்மணல், கருமணல், அறுத்துச் செல்லும் நீர்,, Black sand found on the sea-shore, water; முகில் (mugil) : cloud;

இருண்ட நீல மிக ஒளி திகழ மன்றல் ஓதி நரை பஞ்சு போல் ஆய் (iruNda neela miga oLi thikazhu manRal Othi narai panju pOlAy) : the dark and shiny blue-black hair turns cotton-like white; ஒளி வீசுவதும், இருண்ட நீலநிறமும் வாசனை உடையதுமாகிய கூந்தல் நரைத்து பஞ்சுபோல் ஆகி, மன்றல் (mandral) : fragrant, scented; ஓதி (Odhi) : hair;

உதிரம் எழு துங்க வேல விழி மிடை கடை ஒதுங்கு(ம்) பீளைகளும் முடை தயிர் பிதிர்ந்ததோ இது என வெம் புலால் ஆய் (uthiram ezhu thunga vEla vizhi midai kadai othungum peeLaigaLum udai thayir pithirnthathO ithu ena vem pulAlAy) : The beautiful spear-like eyes, nourished by plentiful blood, now ooze white curd-like discharge that reeks of putrefied meat; இரத்த ஓட்டம் நிறைந்து பரிசுத்தமாகிய வேல் போன்ற இருந்த கண்களில் இருந்து ஓரங்களில் ஒதுங்குகின்ற பீளைகள் நாற்றமடிக்கின்ற தயிர் பிதிர்ந்ததுபோல், கொடிய தீய நாற்றத்துடன் கூடியதாகி உதிரம் (udiram) : blood; முடை (mudai ) : stench; பீளை (peeLai) : rheum, secretion from the eye;

மத கரட தந்தி வாயின் இடை சொருகு பிறை தந்த சூதுகளின் வடிவு தரு கும்ப மோதி வளர் கொங்கை தோலாய் (matha karada thanthi vAyinidai sorugu piRai thantha soothugaLin vadivu tharu kumba mOthi vaLar kongai thOlAy) : The breasts that hide many deceptive tricks within and once protruded like the crescent tusks jutting out of an aggressive elephant have now shrunken into loose skin; எவ்வாறு கரட மதம் பொழிகின்ற யானையின் வாயிலிருந்து சொருகியுள்ள பிறைச் சந்திரனைப் போன்ற வடிவத்துடன் கூடிய சூதுக்கருவியைப் போன்ற தந்தங்கள் வெளி வருகின்றனவோ, அதேபோல் பல சூதுகளை உள்ளே மறைத்துக்கொண்டிருக்கும் உடலை தகர்த்து வரும் கும்பம் போன்ற ஸ்தனங்கள் தோல் போலாகி; தந்தி = யானை; கரடம் = யானை மதம் பாய்ந்த சுவடு;

வனம் அழியும் மங்கை மாதர்களின் நிலை தனை உணர்ந்து தாளில் உறு வழி அடிமை அன்பு கூரும் அது சிந்தியேனோ (vanam azhiyum mangai mAtharkaLin nilai thanai uNarnthu thALil uRu vazhi adimai anbu kUrum athu sinthiyEnO) : Knowing the beauty of these whores are transitory, will I, coming in the lineage of those for whom Your feet are the only refuge, ever remain steadfast in the path of love that worshipping your feet promotes?; வனம் (vanam) : beauty; தாளில் உறு = (உனது) திருவடியையே (சிந்தனை செய்யும்); வழி அடிமை = உனது அடிகளையே பின்பற்றும் வம்சத்தில் பிறந்த அடிமையாகிய நான்; அன்பு கூரும் அது = அன்பு மிக்கு வளரும் அந்த வழியையே; சிந்தியேனோ = நினைக்க மாட்டேனோ?

இதழ் பொதி அவிழ்ந்த தாமரையின் மண அறை புகுந்த நான் முகனும் (ithazh pothi avizhntha thAmaraiyin maNavaRai puguntha nAnmuganum) : BrahmA, the four-faced Lord, sitting in the scented home of the lotus, whose blossoming petals exude fragrance, கோப்பாக இருக்கும் இதழ்களின் கட்டவிழ்ந்த தாமரை மலரின் நறு மணம் உள்ள வீட்டில் புகுந்து வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும்,

எறி திரை அலம்பும் பால் உததி நஞ்சு அரா மேல் இரு விழி துயின்ற நாரணனும் (eRi thirai alambu pAl uthathi nanju arA mEl iru vizhi thuyinRa nAraNanum) : Vishnu, reclining on the venomous serpent in the surging waves of the milky ocean, திருப்பாற்கடல் மேல் அலைகள் வீசுவதால் அசைந்தாடும் நஞ்சுடன் கூடிய பாம்பின் மீது இரு விழிகளும் துயில் புரிகின்ற திருமாலும்; அலம்பு = மேலும் கீழும் அசைந்தாடுதல், wobble

உமை மருவு சந்த்ர சேகரனும் இமையவர் வணங்கு(ம்) வாசவனும் நின்று தாழும் முதல்வ (umai maruvu chanthra sEkaranum imaiyavar vaNangu vAsavanum ninRu thAzhum muthalva) : Parvarti's consort Shiva as well as Indra who is worshipped by all celestials: all of them pay obeisance to you as their chief;

சுக மைந்த பீடிகையில் அகில சக அண்ட நாயகி தன் முகிழ் முலை சுரந்த பால் அமுதம் உண்ட வேளே (suka maintha peedikaiyil akila saka aNdanAyaki than mugizh mulai surantha pAl amutham uNdavELE) : You suckled the nectar from the blooming breasts of the queen of the entire universe sitting on the comfortable throne; சுக மைந்த பீடிகையில் = சுகமும் அழகும் கொண்ட இருக்கையில், அல்லது
சுக மைந்த! = சுகத்தைத் தரும் குமார மூர்த்தியே! சிறந்த பீடத்தில் விளங்கும் எல்லா உலகங்களுக்கும் எல்லா அண்டங்களுக்குந் தலைவியாகிய உமாதேவியாருடைய குவிந்த திருமுலையினின்றும் சுரந்த பால் அமுதத்தைப் பருகிய முருகவேளே!

முளை முருகு சங்கு வீசி அலை முடுகி மை தவழ்ந்த வாய் பெருகி முதல் இவரு செந்தில் வாழ்வு தரு தம்பிரானே.(muLai murugu sangu veesi alai mudugi mai thavazhntha vAy perugi muthal ivaru senthil vAzhvu tharu thambirAnE.) : Baby conch shells flung out rapidly by the waves that dash on the shore, and the dark seas surge high and far, looking like waves of crawling black clouds, to make this town prosperous and outstanding; You reside in this place of exalted knowledge and protect everyone, Oh Great One! மிக்க இளமையான சங்குகளை வீசி அலைகள் கரையில் விரைந்து நெருங்கி மேக நிறக் கடலால் இந்நகரின் வளம் பெருகி, ஞானம் முற்பட்டு உயர்ந்த திருச்செந்தூரில் அனைவருக்கும் வாழ்வைத் தருகின்ற தம்பிரானே. மை தவழ்ந்த வாய் பெருகி = மேகம் தவழ்ந்தது போலப் பெருகி

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே