6. உனைத் தினம்

ராகம்: சாவேரிதாளம்: ஆதி
உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன தருள்மாறா
உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன்மலைபோலே
கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடுபொருபோதே
கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில்வருவாயே
வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர்புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரைஉடையோனே
தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ மகிழ்வோனே
தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவணபெருமாளே.

Learn the Song



Raga Saveri (Janyam of 15th mela Mayamalavagowlai) By Niranjana Srinivasan

Arohanam: S R1 M1 P D1 S    Avarohanam: S N3 D1 P M1 G3 R1 S


Paraphrase

Only the Lord's clemency can save us from the fear of death. For this, we must pray every day, contemplate on His virtues, and be in the constant company of those who adore Him.

உனைத்தினம் தொழுதிலன் (unai thinam thozhudhilan) : I do not worship you every day;

உனது இயல்பினை உரைத்திலன் (unadhu iyalbinai uraiththilan) : I do not talk of your glorious attributes;

பல மலர்கொடு உன் அடியிணை உறப்பணிந்திலன் ஒருதவமிலன் (pala malarkodu un adiyiNai uRappaNindhilan oru thavam ilan) : I do not venerate your feet with many flowers and do not meditate on you;

உனதருள் மாறா உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன் (unadhu aruLmARA uLaththuL anbinar uRaividam aRigilan) : I do not know the whereabouts of those whose hearts are filled with love for you;

விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் (viruppodu un sikaramum valam varugilan) : I not go around your mountain shrines (do 'pradakshinam') with devotion or interest;

உவப்பொடு உன்புகழ் துதிசெய விழைகிலன் (uvappodun pugazh thudhiseya vizhaigilan) : I never praised your glories with ecstasy;

மலைபோலே கனைத்தெழும் பகடது பிடர் மிசைவரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் (malaipOlE kanaiththezhum pagadathu pidar misaivaru kaRuththa venchina maRalithan uzhaiyinar) : The dark Yama (god of death) comes riding on the back of a mountain-like, snarling buffalo along with his companions, மறலி தன் உழையினர் = யமன் உடன் இருப்பவர்கள்

கதித்து அடர்ந்தெறி கயிறடு கதைகொடு பொருபோதே (kadhiththu adarndheR i kayiRadu gadhaikodu porupOdhE) : and approaches me at a rapid pace and throws the thick noose, and fights with a mace.

கலக்குறும் செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்து (kalakkuRum seyal ozhivaRa azhivuRu kaRuththu) : All my actions become confused and the endless thoughts make me lose my balance, கலக்குறும் செயல் ஒழிவற = அடியேனை கலக்கப்படுத்தும் செய்கை அழிந்து போகவும், ஒழிவற அழிவுறு கருத்து நைந்து = ஓய்வின்றி அழிவுறும் எண்ணமும் தன்வசமழிந்து;

அலமுறு பொழுது அளவைகொள் கணத்தில் (naindhu alamuRu pozhudhu aLavaikoL kaNaththil) : and in that very instant when I am battered and in shreds,

என் பயம் அற மயில் முதுகினில் வருவாயே (en bayam aRa mayil mudhuginil varuvAyE) : Come riding on the back of the peacock and wipe away my fear.

வினைத் தலம் தனில் அலகைகள் குதி கொள (vinaiththalam thanil alagaigaL kudhi koLa): Ghosts dance on the battle field

விழுக்குடைந்து மெய் உகுதசை கழுகுண (vizhukkudaindhu mey ugu thasai kazhuguNa) : The wounded flesh breaks and eagles eat them

விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர் புரிவேலா (viriththa kunjiyar enum avuNarai amar purivElA) : you fight the demons with scraggly hair;

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி (miguththa paNpayil kuyilmozhi azhagiya kodichchi ) : with the voice of a cuckoo that practices many a sonnet, the beautiful and creeper-like slim (VaLLi),

குங்கும முலை முகடுழு நறை விரைத்த (kungkuma mulaimuga duzhunaRai viraiththa): with the fragrance from the 'kumkuma' smeared bosom pressed against

சந்தன ம்ருகமத புயவரை உடையோனே (chandhana mrugamadha buyavarai udaiyOnE) : Your mountain-like shoulders smelling of sandalwood and musk

தினத் தினம் சதுர் மறை முநி முறைகொடு புனற்சொரிந்து அலர் பொதிய (dhinaththinam chathur maRai muni muRaikodu punaR chorinthu alar podhiya ) : Every day, Brahma, in accordance with the four Vedas, along with others from heaven, showers water and flowers, முறைகொடு புனல் சொரிந்து--- வேதாகம முறைப்படி தண்ணீரைச் சொரிந்து அபிஷேகம் புரிந்து, அலர் பொதிய = பூக்களை நிறைய இட,

விணவரொடு சினத்தை நிந்தனை செயும் முநிவரர் தொழ மகிழ்வோனே (viNavarodu chinaththai nindhanai seyum munivarar thozha magizhvOnE ) : (and) sages who have abandoned anger make you happy with their worship;

தெனத்தெனம் தென என வரி அளி நறை தெவிட்ட அன்பொடு பருகு (thenaththenanthana ena vari aLi naRai thevitta anbodu parugu) : (Thirupparangiri, where) the lined bees buzzing 'thenaththenam thena' drink honey till satiation

உயர் பொழில்திகழ் திருப்பரங்கிரி தனிலுறை சரவண பெருமாளே.(uyar pozhil thigazh thirupparangiri thanil uRai saravaNa perumALE.) : My Lord, who resides in the lofty orchards of Thirupparangiri

Comments

  1. படித்து, உணர்ந்து அதன்படி செயல்பட அருளிச் செய்து பாடத்திட்ட அருணகிரி நாயரின் புகழ் ஓங்குக.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே