13. அருணமணி மேவு


ராகம்: புன்னாக வராளிதாளம்: அங்க தாளம் (24)
2½+3½+2½+3½+2½+3½+1½+1½+ 3
அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவவி சால பூரண
அம்பொற் கும்பத்தனமோதி
அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக்கிதமாகி
இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி
யின்புற் றன்புற்றழியாநீள்
இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற்றருவாயே
தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக்குழையாளர்
தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரியேயமு
துண்டிட் டண்டர்ககருள்கூரும்
செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித்தருள்மாயன்
திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப்பெருமாளே.

Learn the Song



Know the Ragam Punnagavarali

Janyam of 8th melakarta HanumaTodi — Madhyama sruti
Arohanam: N2 S R1 G1 M1 P D1 N2    Avarohanam: N2 D1 P M1 G1 R1 S N2 S
(Shadjam, Shuddha Rishabham, Sadharana Gandharam, Shuddha Madhyamam, Panchamam, Shuddha Dhaivatham and Kaisiki Nishadham )

Paraphrase

In the first few lines the poet asks for God's grace so that instead of destroying oneself visiting the prostitutes, he may sing the glory of God.

அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன அபிநவ விசால பூரண அம்பொற் கும்பத் தனமோதி (aruNamaNi mEvu bUshitha mrugamadha pateera lEpana abinava visAla pUraNa ampoR kumba thanamOdhi ) : I collided with fresh, large, full, pot-like and the exquisitely adorned and fragrant bosoms of (call) women. சிவந்த இரத்தினமணிகளால் அலங்கரிக்கப்பட்டதாய், கஸ்தூரியும் சந்தனமும் சேர்ந்த கலவை அணிந்ததாய், புதுமை வாய்ந்ததாய், அகன்றதும், நிறைந்ததும், அழகிய பொற்குடம் போன்றதுமாகிய தனங்களில் மோதப்பட்டு,

அளி குலவு மாதர் லீலையின் முழுகி அபிஷேக மீதென அறவும் உறவாடி நீடிய அங்கைக் கொங்கைக்கு இதமாகி (aLikulavu mAdhar leelaiyin muzhugi abishEka meedhena aRavum uRavAdi neediya angai kongaikku idhamAgi) : I drowned in their coquettish friendship and enjoyed long associations with their hands and busts ஆசையுடன் குலாவுகின்ற பொதுமாதர்களின் விளையாட்டில், திருமஞ்சனம் இதுவே என்று முழுகி, மிகவும் அவர்களுடன் உறவு கொண்டு நீண்ட அழகிய கைக்கும் தனத்துக்கும், இன்பம் பூண்டவனாய்; அளி = அன்பு, ஆசை,வண்டு, தேன்;

இருள் நிறைய அம் ஓதி மாலிகை சருவி உறவான வேளையில் இழை கலைய மாதரார் வழி இன்புற்று அன்புற்று அழியா (iruL NiRaiya mOdhi mAligai saruvi uRavAna vELaiyil izhaikalaiya mAdharAr vazhi inbutRu anbutRu azhiyA ) : Instead of getting astray in the passionate moments when the flowers on the women's dark and beautiful hair are crushed and their dresses lie ruffled; இருள் நிறைந்த அழகிய கூந்தலின் பூமாலை, கொஞ்சி உறவு கொள்ளும் வேளையில், ஆபரணங்களுடன் கலைய, பெண்களிடத்தே, இன்பத்தை யடைந்தும் அன்புகொண்டும் அழிகின்றவனாகி,ஓதி (Odhi) : Hair

நீள் இரவு பகல் மோகனாகியெ படியில் மடியாமல் (neeL iravu pagal mOhanAgiye padiyil madiyAmal) : (instead of)being lustful the entire day and night and die, நீண்ட இரவும் பகலும் மோகங் கொண்டவனாகி, இந்த உலகில் வீணே மாண்டு போகாமல்,

யானும் உன் இணை அடிகள் பாடி வாழ என் நெஞ்சில் செம் சொல் தருவாயே (yAnum un iNai adigaL pAdi vAzha en nenjil senchol tharuvAyE:Give me the appropriate words in my heart to eulogize your twin feet and live purposefully.

தருண மணி ஆடு அரா அணி குடில சடில ஆதி ஓதிய சதுர் மறையின் ஆதி ஆகிய சங்க துங்க குழையாளர் தரு முருக (tharuNa maNi Aada arA aNi kudila sadila Adhi Odhiya chathur maRaiyin Adhi Agiya sanga thunga kuzhaiyALar tharumuruga ) : the son of the primeval god (Shiva) whose slant, curly tresses carry young serpents with gems in their hoods, who is the progenitor of the four vedas, and who wears ornaments made of pure conch on his ears; இளமையையும், இரத்தின மணிகளையும், ஆடலையும் உடைய, பாம்பையணிந்துள்ள, வளைந்த சடையையுடைய ஆதிப் பொருளும், ஓதியுள்ள நான்கு வேதங்களின் முதற்பொருளும், தூய சங்கினாலாகிய குழையை அணிந்தவருமாகிய சிவபெருமான் தந்த முருகக் கடவுளே! தருண (tharuNa) : youthful; அரா (arA) : Serpent; துங்க (Thunga) : pure;

The next lines describe Lord Vishnu and then addresses Lord Muruga as former's nephew:

மேக சாயலர் தமர மகர ஆழி சூழ் புவிதனை முழுதும் வாரியே அமுதுண்டிட்டு (mEga sAyalar thamara magara Azhi sUzh buvi thanai muzhudhum vAriyE amuthundittu) : (Vishnu) with the complexion of a dark cloud, who swallows the earth with its oceans filled with Makara fish as if it was Amrita. During Pralaya or the Great Dissolution, the entire creation enters into Vishnu. நீலமேக நிறத்தினரும், ஒலியுடன் கூடிய, மகர மீன்கள் வாழ்கின்ற கடல் சூழ்ந்த மண்ணுலகெல்லாம் எடுத்து அமுதம் போல் உண்டவரும்,

அண்டர்க்கு அருள்கூரும் செரு முதலி (aNdarkku aruL kUrum serumudhali mEvu) : the war chief who offers grace and protection to celestials, தேவர்கட்கு அருள் மிகுதியாகப் புரிபவரும், போருக்குத் தலைவரும்,

மேவு மாவலி அதிமத கபோல மாமலை தெளிவினுடன் மூலமே என முந்தச் சிந்தித்து அருள்மாயன் திருமருக (mEvu mAvali adhimadha kapOla mAmalai theLivinudan mUlamE ena mundha sindhiththu aruL mAyan thirumaruga) : You are the nephew of the inscrutable Vishnu who came quickly to the aid of the strong and ferocious mountain of an elephant ('Gajendra') when he shouted Your name ('aadhi moolam') with a clear mind. விரும்பிய, பெரிய வலிமையையும், அதிக மதத்தைக் கொண்ட கன்னத்தையும் கொண்ட, பெரிய மலை பொன்ற கஜேந்திர யானை, தெளிந்த அறிவோடு, ஆதிமூலப் பொருளே! என்று அழைக்க, முற்பட்டு கருணையுடன் நினைத்து அருள் புரிந்த திருமாலின் திருமருகனாரே,

சூரன் மார்பொடு சிலை உருவ வேலை ஏவிய ஜெயசரவணா மநோகர செந்தில் கந்த பெருமாளே.(sUran mArbodu silaiyuruva vElai Eviya jeyasaravaNA manOhara sendhil kandhap perumALE) : You aimed the spear to penetrate the demon's chest as well as the mountain, oh Victorious Saravana, the winner of my heart and the resident of Tiruchendur! சூரனுடைய மார்பும், கிரௌஞ்ச மலையும் உருவுமாறு, வேற்படையை ஏவிய வெற்றியையுடைய சரவணக் கடவுளே! மனத்திற்கு இன்பம் தருபவரே! திருச்செந்தூரில் வாழுங் கடவுளே! பெருமையின் மிகுந்தவரே!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே